Skip to main content

ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் திருக்கோயில்

*ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர்*

*மூலவர்:* மார்க்கபந்தீஸ்வரர்.

(சுவாமி சுயம்பு மூர்த்தி,  சாய்ந்த மகாலிங்கம்)
மற்ற பெயர்கள்: வழித்துணைநாதர், மார்க்கசகாயர்-
#சாய் சரவணன்.
*அம்மன்:* மரகதாம்பிகை

*தீர்த்தம்:*
சிம்ம  தீர்த்தம் & ப்ரம்ம தீர்த்தம்

*ஸ்தல விருட்சம்:* பனை மரம்

*ஸ்தல புராணம்:*

ப்ரம்ம தேவன், திருவண்ணாமலையில் சிவனின் அடி, முடி காண முடியாமல் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடி கண்டதாக கூறி அவதிப்பட்டார். சாபவிமோசனம் பெற வேண்டி  இந்த  விரிஞ்சிபுரம் சிவபெருமானை ஆராதிக்கும் சிவநாதன் மற்றும் நயினாநந்தினி என்ற கோவில் குருக்கள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்து    'சிவசர்மன்' என்ற பெயர் கொண்டு வளர்ந்தார்.

சிவசர்மன் சிறுவனாக இருக்கும் பொழுதே, தனது தந்தையை இழந்தார். அதற்குப் பிறகு, தாய் நயினாநந்தினி தனது மகனுக்கு   உபநயனம் செய்விக்க மற்ற உறவினர்கள் உதவாத காரணத்தால்  சிவபெருமானை வேண்டி மனதார தொழ, அவளது கனவில் ஈசன் தோன்றி மறுநாள் காலை கோவில் தீர்த்த குளத்தில் மகனை நீராட்டி காத்திருக்க சொன்னார். ஈசன் கூறியது கார்த்திகை மாத கடைசி சனிக்கிழமை, ஆகவே, மறுநாள் கார்த்திகை ஞாயிறு அன்று தாயும் தனது மகனுடன் கோவில் குளக்கரையில் குளித்து முடித்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஆவலுடன் காத்திருந்தனர். அப்பொழுது ஒரு வயது முதிர்ந்த அந்தணராக ஈசனே அவ்விடம் வந்து பாலகனுக்கு ப்ரம்மோபதேசம் மற்றும் சிவ தீட்சை அளித்தார். உபநயனம் முடிந்து அவர்கள் கோவிலை வலம் வருவதற்குள் ஈசன் மறைந்து விட்டார்.  அதன் பிறகு தான் வந்தவர் ஈசன் என்பதை அனைவரும் உணர்ந்து, பாலகனுக்கு உயரிய மரியாதை அளித்து சிவனுக்கு பூஜை செய்யும் படி கூறினர்.

பாலகனும், உடனே சிவனுக்கு பூஜை செய்ய தயார் ஆனான்.  கையில் நீர் நிறைந்த குடத்துடன் பகவானுக்கு அபிஷேகம் செய்ய சென்றான். சுயம்பு லிங்கம் உயரமானதாக இருந்ததால் பாலகனுக்கு திருமுடி எட்டவில்லை. திருமுடி எட்டவில்லையே என மனம் உருகி கண் கலங்கி நிற்க, அவனது பக்திக்கு இறங்கி, இறைவன் திருமுடியை வளைத்தார்.   சிறுவன் செய்த பூஜைகளை ஏற்றுக்  கொண்டார். இன்றும் திருமுடி சாய்ந்த நிலையில் ஸ்ரீ மார்க்க பந்தீஸ்வரர் காட்சியளிக்கிறார்.

திருவண்ணாமலையில் ப்ரம்மனாக இருந்த பொழுது ஆணவத்தில் ஈசனின் அடி, முடி காண முற்பட்ட பொழுது முடியவில்லை; ஆனால் அதே ப்ரம்ம தேவன், பாலகனாக வந்து உண்மையிலேயே மனம் வருந்திய பொழுது, ஈசன்  தனது சிரம் தாழ்த்தி பூஜை செய்ய அனுமதித்தார்.


இதன் காரணமாகவே, இப்பொழுதும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை சிம்ம தீர்த்தம் குளத்தில் நீராடும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அன்று சிம்ம  தீர்த்தத்தில்  குளித்து விட்டு குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அன்று கோவிலிலேயே, வசந்த மண்டபத்தில் ஈர உடையுடன் உறங்கும் பொழுது ஈசன் கனவில் வந்தால், அவர்களுக்கு அடுத்த வருடம் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்பது இன்று வரை பக்தர்களின் அசைக்க முடியாத  நம்பிக்கையாக உள்ளது.

மேலும், தனபாலன் என்ற மிளகு விற்கும் வணிகருக்கு, ஈசன் வேடுவனாக வந்து வழி காட்டியாகவும், வழித்துணையாகவும் இருந்ததால் மூலவர் "வழித்துணை நாதர்" / "மார்க்க சகாயர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

*கோவில் பெருமை:*

கோவில் 2300 ஆண்டுகள் பழமையானது. வேலூர் மாவட்டத்தில் மிகப்  பெரிய கோவில். சிவவிரிஞ்சி புராணம், சிவ ரகசியம், காஞ்சி புராணம், அருணாச்சல புராணம் ஆகியவற்றில் கோவிலின் பெருமை காணலாம். கோவிலுக்கு பாஷ்கர க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. சூரியக் கதிர்கள் பங்குனி மாதம் லிங்கத்தின் மேல் படுவதால் இப்பெயர்.


110 அடி உயரம் 7 நிலைகள் கொண்டு கிழக்கு பார்த்த ராஜ கோபுரம். 5 பிரகாரங்கள் உள்ளது.  நீண்ட உயரமான  அழகான மதில் சுவர். இந்த கோவில் மதில் சுவருக்கென்று வழங்கும் சிறப்பான  மொழித்தொடா் ஒன்று உள்ளது.

வேதாரண்யம் விளக்கழகு !

திருவாரூர் தேரழகு !

திருவிடைமருதூா் தெருவழகு !

திருவிரிஞ்சை மதிலழகுஎன்பதாகும்...

மாடவீதிகள் அகலமாக இருக்கும். மிகப்பெரிய நுழைவாயில். உயரமான இரண்டு வாசல் கதவுகள். நுழைந்தவுடன் நந்தி பகவான். இரண்டு துவஜ ஸ்தம்பங்கள்; ஒன்று சிவனுக்கு, மற்றொன்று அம்மனுக்கு. இடது பக்கம் சிம்ம தீர்த்தம்.

உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், முருகன் சன்னதிகள் மற்றும் சுவாமி சன்னதிக்கு செல்லும் வழி. மூலவர் சந்நதியில் ருத்திராட்ச பந்தல் விசேஷம். சுவாமி தரிசனம் முடித்து உள்பிரகாரம்.  இங்கு சிற்பங்கள் நிறைந்திருக்கும். வெளியே வந்து உற்சவ மண்டபம்; அதை கடந்து சென்றால் ஸ்தல விருட்சம் பனைமரம்.  இங்கு  பனங்காய் ஒரு வருடம் கருப்பாக இருக்கும். அடுத்த வருடம் காய் வெள்ளையாக இருக்கும்.

இடது பக்கம் அம்மன் மரகதாம்பிகை சன்னதி.  அம்பாள்சன்னதியிலிருந்து வேலூா்அ௫ள்தரும் ஜலகண்டேஸ்வரா்திருக்கோயிலில் உள்ள நடராஜா்சன்னதிக்கும் இடையில்சுரங்கப்பாதை உள்ளதாகச்செவிவழிச் செய்தி ஒன்றும்உள்ளது.மேலும் நீங்கள் நேரம்பார்க்கலாம் வாங்க என்றுஅழைக்கும் அபூர்வமானமணிகாட்டும் கல்லை இங்குகாணலாம். (குறிப்பு: கருங்கல்மணி காட்டுமா என்று சந்தேகம்கொள்பவா்கள் சிறு குச்சியைமணி காட்டும் கல்லின் மேல்வைத்து அதன் நிழல் விழும்இடத்தைநோக்கினால் உண்மையானநேரத்தை அறிந்து கொள்ளலாம்)இது போன்று வேறு எங்கும் மணிகாட்டும் கல்லைக் காணஇயலாது.


1008 சிவலிங்கம், 108 சிவலிங்கம் மற்றும் பஞ்ச முக சதா சிவலிங்கமும் உள்ளது விசேஷம். இம் மூன்றும் ஒரே கோவிலில் இருப்பது மிகச்சில சிவன் கோவில்களில் மட்டுமே உள்ளது.

இவ்வாலயத்தின் தெற்கு முகமாகஅமைந்துள்ள பிரம்ம தீா்த்தத்தின்அமைப்பும் ‚எழிலும்கண்கொள்ளாக் காட்சியாகும்இத்தடாகத்தின் மத்தியில் நீராழிமண்டபம் மற்றும் பிரம்ம புரீஸ்வரா் ஆலயம் உள்ளன.

சிறப்பான கட்டிட அமைப்புகொண்ட எழில் மிக்க சிற்பங்கள்‚இறைவன் சன்னதி, அம்மன்சன்னதி மற்றும் சில சன்னதிகள்,மண்டபங்கள்‚ மதிற்சுவா் இவைஅனைத்தும் கட்டியவா் யார்? என்றமுழு விவரங்கள் இன்று வரை தெரிய வில்லை.இத்தலத்தைச் சுற்றிலும்பல்லவா்களின் கல்வெட்டுகளும்‚சோழா்களின் கல்வெட்டுகளும்‚பாண்டியா்களின்கல்வெட்டுகளும்‚ விஜய நகரமன்னா்களின் கல்வெட்டுகளும்‚மற்றும் கா்நாடகப் பகுதி சோ்ந்தமுதலாம் வேங்கடபதிகல்வெட்டுகளும்உள்ளன. சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் கோவில்.

மார்கபந்து ஸ்தோத்ரம் இயற்றிய ஸ்ரீ அப்பய்ய தீட்சிதர் அவதரித்த ஸ்தலம்.

*அமைவிடம்:*

சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் பை-பாஸ் (By-Pass) கடந்து சேதுவாலை என்ற இடத்தில் வலது பக்கம் திரும்பினால் கோபுரம் தெரியும், அதன் பிறகு 1 கீ.மீ. தூரம் செல்ல வேண்டும்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை.

மாலை 4:30 மணி முதல் 8:00 மணி வரை

*முக்கிய உற்சவங்கள்:*

பங்குனி மாதம் 10 நாட்கள் ப்ரம்மோத்சவம் நடைபெறும். கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விசேஷம்.
🙏🕉⛳🙏🕉⛳🙏🕉⛳
*ஓம் நம ஷிவாய*

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...