Skip to main content

Posts

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...
Recent posts

அனுமன் பஞ்சரத்னம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் ஸஷீம்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி: தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம் தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம் ஏதத்பவனஸஷீதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம் சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்வதி (ஆதிசங்கரர் அருளியது)

சொர்க்கம், நரகம்

ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.

வைகுண்டவாசப் பெருமாள்

*🔯கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயில்!* *கர்ப்பவதி கோலத்தில் மேடிட்ட வயிற்றுடன் சீதா தேவியை எங்காவது நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?* அப்படிப்பட்ட அபூர்வ சீதையின் முன் நின்று, கண் மூடிப் பிரார்த்தனை செய்தாலே குழந்தை வரம் கிட்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும். *🔯சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்த தலம் இதுதான்.* சீதா-ராமனின் குழந்தைகளான லவனும் குசனும் வழிபட்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த வைகுண்ட வாசன் திருக்கோயில். சிவன் கோயில் வடக்குப் பார்த்தபடி இருக்கிறது என்றால், இந்தப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி 115 அடி நீளத்துடனும் 188 அடி அகலத்துடனும் அழகுற அமைந்திருக்கிறது.  உள்ளே நுழைந்ததும் காணப்படும் தசாவதாரக் காட்சி பரவசப்படுத்துகிறது.  எதிரில் லவ குசர்கள் நீராடிய திருக்குளம்.  குளக்கரை வாசலில் ஆஞ்சநேயர் ஆலயமும் அமைந்துள்ளது. பெருமாள் கோயில்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏதாதசியன்று மட்டும் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்குமே! அந்த வைகுண்ட வாசன்தான் இந்த ஆலயத்தில் வருடம் பூராவும் பக்தர்கள...

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம். சுமங்கலி பூஜை எப்படி செய்வது? இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமி படங்களுக்கு பூ, தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும். சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் . நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் . தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் . சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும். தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை , ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, ப...

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே... வாழ்வு என்பது, ஒரே ஒரு முறை, இப்பூவுலகில் அன்புடன் நாம் வாழ இறைவன் வழங்கிய அருட்கொடை. ''பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை காய்ப்பதெல்லாம் பழுப்பதில்லை பழுப்பதெல்லாம் பயன்படுவதில்லை வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையில்லை''. ஒரு முறை நினைத்து பாருங்கள். நாம் எத்தனை பெரிய பாக்கிய சாலிகள். பலகோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவமைக்க முடியாத தசைகளால் ஆன கம்ப்யூட்டர் நமது மூளை. ஓய்வே எடுக்க முடியாமல், 24 மணி நேரமும், விழிப்போடு இருக்கும் நம் இதயம். கேமராவை விட காட்சிகளை பல மடங்கு, அற்புதமாக காட்டும் நமது கண்கள் இப்படிப்பட்ட அற்புதமான உடம்பை வெறுமனே படுக்கையில் படுக்க வைக்கலாமா? உழையுங்கள். உழைத்தால் தான் உடம்புக்கும், மனதுக்கும்ஆரோக்கியம். வாழ்க்கையின் சிறப்பு என்ன என்பது, அப்போது தான் தெரியும். காலம் முழுவதும், கல்லாய் கிடக்கவா? மண்ணில் வந்து பிறந்தோம். இருந்த இடத்தில் இருப்பேன். தானாக வந்து விழுந்தால், வாய் திறந்து உண்பேன் என்று, மலைப்பாம்பு நினைக்கலாம். மனிதன் நினைக்கலாமா? செயலற்றுகிடப்பது சாவுக்கு சமம். உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி. யாரையும் ...

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார். ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்க...