Skip to main content

தோஷம் போக்கும் விநாயகர்

விநாயகர் வழிபாடு பித்ரு தோஷத்தையும் போக்கும்.

கோதாவரி நதிக்கரையில் போகவதி என்னும் பட்டணத்தை நற்சோமதிமகராஜா என்பவன் ஆண்டு வந்தான். அவனது சபைக்கு நாரத மகரிஷி ஒரு சமயம் வந்தார்.

 அப்போது, இந்தப் பூவுலகில் எந்த தலம் மிகவும் சிறந்த புண்ணியஸ்தலம்?...’ என மன்னன் கேட்டான்.

*அதற்கு நாரதர், ‘‘எந்தப் புண்ணியத் திருத்தலத்தில் பித்ருக்கள் திலநீர் பிண்டதானத்தை எதிரே தோன்றி ஏற்பார்களோ, அதுவே உத்தமமான புண்ணியஸ்தலம்!... ’ என்று பதில் அளித்தார்.*

 தலத்தின் பெருமையை மன்னவனே அறியட்டும் என ஊர்ப் பெயரைக் கூடச் சொல்லாமல் விடை பெற்றார் நாரதர்.

 நாரதர் சொன்னபடி நற்சோதி மன்னன் இந்தியாவில் உள்ள அனைத்து தலங்களிலும் தில் (எள்) தர்ப்பணமும், பிண்டதானமும் செய்து கொண்டு வந்தான்.

 கும்பகோணம் வந்து காவிரி ஆற்றில் நீராடி தர்ப்பணமும் செய்தான்.

‘எவ்வளவோ புண்ணிய நதிகளில் நீராடி தர்ப்பணம் செய்து விட்டேன். இன்னமும் பித்ருக்கள் யாரும் நேரில் காட்சி தந்து பிண்டங்களை வாங்க வில்லையே நம் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடலாமா?....’ என்று மனம் உடைந்து வருந்தினான் மன்னன்.

 அப்போது நாரதர், மன்னன் முன் தோன்றினார்.

 ‘‘கலங்காதே மன்னா! நான் கூறிய புண்ணியத்தலத்தின் அருகில் நீ வந்து விட்டாய் இங்கிருந்து கிழக்கே திருநாகேஸ்வரம் தலம்.

 அதையடுத்து திருவீழிழலை... அதற்கு அப்பால் சிலகாததூரம் சென்றால் ‘திலதைப்பதி’ என்ற புண்ணியதலம் உள்ளது.

*அங்கு ஓடும் ‘அரசி’ லாற்றில் நீராடி, தென்புலத் தாராகிய உன் பித்ருக்களுக்கு தில தர்ப்பணமும், பிண்டதானமும் செய்தால் அவர்கள் உன் முன் தோன்றி அதை வாங்கி உண்பார்கள்...’ என்று அருளாசி வழங்கினார்.*

 திலதைப்பதி வந்த நற்சோதிமன்னன் அங்கே தவம் செய்து கொண்டிருந்த காலவ முனிவரை வணங்கி ஆசி பெற்றான்.

மன்னன் வந்த நோக்கம் அறிந்த முனிவர், சிவாலயத்துக்குள் அழைத்துச் சென்று பொற்கொடி அன்னையையும், மந்தாரவனேஸ்வரர் பெருமானையும் தரிசனம் செய்வித்தார்! அமாவாசை தினத்தன்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நடுப்பகலில் சங்கல்பத்துடன் திலதர்ப்பணம், பிண்டம் (அன்னம்) இவற்றை படைத்தான் மன்னன் பித்ருக்கள் அவன் முன் தோன்றி தங்கள் கரங்களால் பிண்டத்தை ஏந்தி சாப்பிட்டு மகிழ்ந்து நல்லாசி அளித்து மறைந்தனர்!

*‘திலம்’ என்றால் ‘எள்’ என்று பொருள்.*

 *‘தர்ப்பணம்’ என்றால் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பித்ரு கடன்கள் ‘புரி’ என்றால் தலம்.*

 எனவே

 ‘திலதர்ப்பணபுரி’ என்றால் எள் தர்பணம் செய்ய சிறந்த தலம் என்று பொருள்.

 *இந்த ஆதி விநாயகர் கோவிலின் வழியாகச் சென்ற ஸ்ரீராமன் இங்கு தான் தன் தந்தை தசரத மகாராஜாவுக்கு பித்ருகடன் செய்துள்ளார்.*

பித்ரு சாபம், பித்ரு தோஷம் போன்றவற்றுக்கு இங்கு நேரில் வந்து தர்ப்பணம் செய்து பரிகாரம் காணலாம்.

தவிர, தாங்கள் மூதாதையர் இறந்த நாள் தெரியவில்லை என்றாலும் இந்த ஆதி விநாயகர் கோவிலில் எப்போது வேண்டுமானாலும் பித்ருகடன் செய்யலாம்.

 ஆதி விநாயகர் என்று அழைக்கப்படும் நரமுக கணபதி மனித உருவத்தோடு ஜடாமுடி ஆயுதங்களை இரு கைகளிலும், வலக்கையை இடக்காலின் மீது வைத்த படியும் காட்சி கொடுக்கிறார்.

ஆதியில் பார்வதி தேவி பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் தான் இப்படி நரமுக விநாயகராகக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த கோவிலின் ஈசன் பெயர் முக்தீஸ்வரர். இறைவி பெயர் சொர்ணவல்லி.

திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் ஏறி பூந்தோட்டம் என்ற ஊரில் இறங்க வேண்டும்.

பின்பு அங்கிருந்து எரவாஞ்சேரி வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஆதி விநாயகர் கோவிலை அடையலாம்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...