Skip to main content

பக்தி

பகவானிடம் பக்தி கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை.

 பக்தி என்பது அவரவர் மனோபாவத்திற்கு ஏற்றதாக அமைகிறது. இப்படி பக்தியை ஒன்பது விதமாக வகைப்படுத்த முடியும்.

சிரவணம் - பகவானுடைய நாமங்களையும், அவனுடைய கல்யாண குணங்களையும் கேட்பது.

கீர்த்தனம் - பகவானின் பெருமைகளைப் பேசுவது.

ஸ்மரணம் - எப்பொழுதும் பகவானை நினைத்துக் கொண்டிருப்பது.

பாத சேவனம் - பகவான் கால்களில் விழுந்து வணங்குவது.

வந்தனம் - பகவானை வணங்குவது, அவனைப் போற்றுவது.

அர்ச்சனம் - பகவானுக்கு மலர்களையும், கனிகளையும் கொடுத்து மகிழ்வது.

தாஸ்யம் - பகவானின் வேலைக்காரனாக நடந்து கொள்வது.

ஸக்யம் - பகவானிடம் நட்பு கொள்வது.

ஆத்ம நிவேதனம் - பகவானுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வது.

இராமாயணத்தில் இந்த ஒன்பது வகையான பக்திக்கும் சிலரை
உதாரணமாகக் கொள்ள முடியும்.

ச்ரவண பக்தி - அனுமார் - இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தவர்.

கீர்த்தன பக்தி - வால்மீகி - இராமாயணம் இயற்றியவர்.

ஸ்மரண பக்தி - சீதை - அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை இந்த பத்து மாதம் இராமனையே நினைத்திருந்தாள்..

பாதசேவன பக்தி - பரதன் - இராமனின் பாதுகையை இராமனாக நினைத்து வணங்கியவன்.

வந்தன பக்தி - வீபீஷணன் இராவணனின் தம்பியானவன்,
இராமனையே வணங்கி வந்தான்.

அர்ச்சன பக்தி - சபரி - இராமனுக்கு நல்ல பழங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பழத்தையும் தானே கடித்துப்பார்த்து அளித்தவள்.

தாஸ்ய பக்தி - இலட்சுமணன் - இராமனுடனேயே இருந்து அவரதி
சொல்படி நடந்தவன்.

ஸக்ய பக்தி - சுக்ரீவன் - இராமனுடன் நட்பு கொண்டவன்.

ஆத்ம நிவேதனம் - ஜடாயு இராவணனிடமிருந்து சீதையைக்
காப்பாற்ற முயன்று தன் உயிரைக் கொடுத்தவர்.

இந்த ஒன்பது வகை பக்தியில் எது சிறந்ததாக கருதப் படுகிறது?

நமக்கு பார்க்க பிடிக்காத விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு தவிர்க்கலாம்.

பேச பிடிக்கவில்லை என்றால், வாயை மூடிக் கொள்ளலாம்.

ஆனால் நல்ல விஷயங்களை எப்போதுமே கேட்கவேண்டும் என்பதற்க்காக தான் காது திறந்தே இருக்கிறது.

நடந்து கொண்டே இருந்தால், கால் வலிக்கும்.

பார்த்துக் கொண்டே இருந்தால் கண் வலிக்கும்.

பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும்.

எழுதிக் கொன்டே இருந்தால் கை வலிக்கும்.

ஆனால் கேட்டுக்கொண்டே இருந்தால் காது வலிக்காது.

அதனால் எப்பொழுதும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...