Skip to main content

சமையல் சாஸ்திரம்

*பெண்கள் காலையில் சமையலறைக்கு சென்றதும் எதை முதலில் சமைக்க வேண்டும்?* 

*சாஸ்திரம் என்ன சொல்கிறது ?.

பெண்கள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, சமையலறைக்கு சென்று, சமையலறையை சுத்தம் செய்த பின்பு, எதை சமைப்பார்கள்!

அதாவது சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, சில பேரது வீட்டில் வளர்ந்து வரும் நவ நாகரீக சூழ்நிலைக்கு ஏற்ப பலகாரங்கள் கூட செய்யப்படும். அதாவது இட்லி, தோசை, பூரி, பொங்கல் இவைகள் கூட செய்யலாம். ஆனால் நம்முடைய பாரம்பரியப்படி அந்த காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் எந்த முறையை பின்பற்றி வந்தார்கள்?.

 அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சிறிய புராண கதை.

காரைக்கால் அம்மையாரை பற்றிய கதைதான் இது. இந்த காரைக்கால் அம்மையாரை பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

 சிவபெருமானை காண்பதற்கு கைலாயம் சென்றபோது, ‘கைலாயம் என்பது சிவன் வசிக்கும் இடம்’. அந்த இடத்தை காலால் எப்படி மிதிப்பது? என்று, தன்னுடைய தலையால் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்த பெருமை இவருக்கு உண்டு.

ஒருநாள் காரைக்கால் அம்மையாரது வீட்டிற்கு சன்னியாசி வேடத்தில் வருகை தந்தார் ‘ஈசன்’.

 அந்த காலங்களில் எல்லாம் பிச்சை கேட்டு வரும் அடியார்களுக்கு எதுவும் இல்லை என்று சொல்லாமல் உபச்சாரம் செய்வது என்பது நம்முடைய பாரம்பரியமாக இருந்து வந்தது.

அந்த சன்னியாசி பிச்சை கேட்டு வந்த அந்த நேரத்தில், காரைக்காலம்மையார் வீட்டில் வெறும் சாப்பாடு மட்டுமே இருந்தது. சாப்பாட்டுடன் சேர்த்து இரண்டு மாம்பழங்களும் இருந்தன. சாதத்திற்கு குழம்பு எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தெரியாத அம்மையார், ஒரு பாத்திரத்தில் சாதத்தையும் மாம்பழத்தையும் மட்டும் போட்டு தன் வீட்டிற்குப் பிச்சை கேட்டு வந்த அந்த சன்னியாசிக்கு கொடுத்துவிட்டார்.

ஆனால் சன்னியாசி வேடத்தில் வந்திருக்கும் அந்த முனிவர் சிவன் தான், என்ற உண்மை காரைக்கால் அம்மையாருக்கு தெரியாது.

காலை வேலையில், வெறும் சாதத்தை மட்டுமாவது வடித்து வைத்திருந்ததால் தான், பசியோடு வந்த அடியாருக்கு தன் வீட்டில் இருந்த சாதத்தை மட்டுமாவது, காரைக்கால் அம்மையாரால்,  உணவாக தர முடிந்தது.

அன்று மட்டும் காரைக்காலம்மையார் முதலில் சாதத்தை வடிக்காமல், குழம்பு மட்டுமே வைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது.

 காரைக்கால் அம்மையார் சிவபெருமானை சரண் அடைந்ததற்கு, இதுவும் ஒரு காரணமாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இப்போது தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கான பதில், நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் !.

 இதோடு மட்டுமல்லாமல் காலையில் வடித்த சாதத்தோடு சிறிது நெய் சேர்த்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கும் பழக்கத்தை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் சமைக்கலாம். ஆனால், அதையெல்லாம் சமைப்பதற்கு முன்பாக முதலில் சாதத்தை வடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த சாதத்தை நெய் விட்டு இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து விட்டு, அதன்பின்பு அந்த நாளைத் தொடங்கிப் பாருங்கள். நிச்சயமாக வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். அந்த காலமாக இருந்தாலும், இந்த காலமாக இருந்தாலும், நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயம் எதுவுமே பொய்யாகாது.

 காரணமில்லாமல் எந்த ஒரு செயலையும் நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...