Skip to main content

எண்ணங்களை கட்டுபடுத்தமுடியுமா?

எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு எண்ணம்தான். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது முடிவில்லாத போராட்டம். அதற்கு ஒரு வழியே யோகா.

எண்ணங்கள் இருக்க அனுமதியுங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது தானாகவே தொடரட்டும். எண்ணங்கள் இருக்கினறன என்ற விழிப்பு உணர்வு மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். மெல்ல, மெல்ல எண்ணங்கள் வலுவிழந்துவிடும். இது ஒரு வழி.

பிராண சக்தி

பிராணசக்தியைக் நம் ஆளுமைக்குள் கொண்டு வந்தால் எண்ணங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

உங்கள் எண்ணமாக இருந்தாலும், இதயமாக இருந்தாலும் உங்கள் அணுக்களாக இருந்தாலும், உடலுக்குள் இருக்கிற அத்தனை இயக்கங்களும் உங்கள் பிராணசக்தியின் அடிப்படையான துணையோடுதான் நடைபெறுகின்றன.
பிராணசக்தியை உங்கள் தீவிர கணத்தில் இருக்கும் நிலையில் எண்ணம் கிடையாது. உங்கள் பிராணசக்தி மீது போதிய ஆளுமையிருந்தால், உங்கள் மனம் மீது, உங்கள் உடல் மீது, உங்கள் உடல் இயக்கங்கள் மீதெல்லாம் உங்களுக்கு ஒரு ஆளுமையிருக்கும்.

இந்தக் கட்டுப்பாடு வருவது என்பது உங்கள் தாகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ, பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்ல. பிராணசக்தியைக் நம் கவன ஆளுமைக்குள் கொண்டுவந்தாதல் போதும். எண்ணங்களுக்கும் இதுவே பொருந்தும்.

பிராணசக்தியைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்கள் எளிதாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிரணாயாமத்தில் கும்பகா, சூன்யகா, நிலைகளின் போது, பெரும்பாலும் அங்கு எண்ணங்கள் இருப்பதில்லை. நீங்களாக முயற்சி செய்து நினைக்க முற்பட்டாலேயொழிய, எண்ணம் அப்போது தோன்றாது. ஒருமுறை கும்பகா நிலையை இருத்தி வைத்துப்பாருங்கள். எண்ணம் இருக்காது.

நான் அப்படியே கொஞ்சநேரம் அமர்ந்திருந்தால், ஒரு எண்ணம் கூட வராமல் அமர்ந்திருக்க முடியும். நான் எதுவுமே செய்வதில்லை. வெறுமனே அமர்ந்திருக்கிறேன். ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிக்கலாம் என்று பார்க்கிறேன். எண்ண ஓட்டங்களே இல்லாமல் அதை இயல்பாகப் இருப்பதை உணர முடியும்.

 வெறுமனே பார்ப்பதற்கும், எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. வெறுமனே பார்ப்பதற்கு எண்ண ஓட்டம் தேவையில்லை. பார்ப்பதென்றால் வெறும் கண்களோடு மட்டுமல்ல. கண்கள் மூடிய நிலையிலும் பார்க்க முடியும். எனவே போதிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்கிறபோது, நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எண்ணங்கள் அப்போது ஏற்படுவதில்லை. நீங்கள் முழு விழிப்புணர்வோடு இருக்கிறபோது நன்றாகப் பாருங்கள். எண்ண ஓட்டங்களே இருக்காது.

பொதுவாக எண்ணங்கள் வருகிறபோது உங்கள் விழிப்புணர்வு போயிருக்கும். ஒருவேளை தியானத்தின்போது, எண்ண ஓட்டங்களை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இல்லையென்றால் அது பொதுவாக அப்படித்தான். எண்ண ஓட்டங்கள் இருக்கிறபோதே, முழு விழிப்புணர்வோடு இருக்கிற சம்யமா முறையை பின்பற்றினால் தான் முடியும்.

வாழ்க்கையும் ஆன்மீகமும் வெவ்வேறா?

வெறுமனே பார்ப்பதற்கும், எண்ணத்தோடு பார்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு.

அதற்கு, செயல்முறைப் பயிற்சி தேவை. செயல்முறைப் பயிற்சி குறைகிறது. வாழ்க்கை ஒரு புறமும், ஆன்மீகம் ஒரு புறத்திலும் இருக்கிறது. பரவாயில்லை. இப்போது உங்கள் வாழ்க்கையை இந்தவிதமாக அமைத்திருக்கிறீர்கள். ஆனால் இதன் எல்லையை நீங்கள் பார்க்க விரும்பினால், இந்த உள்நிலை உலகம் எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணர விரும்பினால், அதற்கென்று மேலும் சில தேவைகள் உண்டு. சில சின்னச்சின்ன பரவசங்கள், இந்த சின்ன சந்தோஷங்கள் உங்களுக்குப் போதுமென்றால் எந்தவித செலவும் இல்லாத, பின்விளைவு இல்லாத போதைதான் யோகா என்று நினைக்கிறீர்கள்.

யோகா வகுப்பிற்கு வந்து சிறிது நல்ல நிலையை உணர்கிறீர்கள். அவ்வளவுதான். சிறிது மதுவையோ அல்லது போதைப் பொருளையோ பயன்படுத்தி ஒரு பரவச நிலைக்குப் போவதுபோல, இதிலேயே நீங்கள் மகிழ்ச்சியடைந்தீர்கள் என்றால் உங்களுடைய இப்போதைய கர்மா இப்படித்தான்.

இதைத்தாண்டிப் போக வேண்டுமென்றால் இன்னும் ஆழமான ஆன்மீகப் பயிற்சி நிலைகள் வேண்டும். இதற்கு நீங்கள் முதலிடத்தைத் தரவேண்டும். அப்போது உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பூவின் இதழ்கள் உதிர்கிற மாதிரி உங்களை நீங்கள் உதிர்த்துக்கொள்ள முடியும். நாளுக்கு நாள் அது நிகழும். எல்லாமே மறைந்துவிடும். எது உண்மையோ அது மட்டும் நிலைக்கும். உதிர்ந்து போகிற அனைத்தும் உதிர்ந்து போகட்டும். உதிர்ந்து போகப் போகிற விஷயங்களை இருத்தி வைத்துக் கொள்வதற்காக, வாழ்வின் பெரும் பகுதியை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எப்போதும் உங்களை விட்டு விலகிக் கொள்கிற விஷயங்களைத்தான் நிலைநிறுத்திக் கொள்ள அதிகம் முயற்சி செய்கிறீர்கள். எது விழப்போகிறதோ அது விழட்டும். எல்லாமே விழட்டும். விழ முடியாத ஒன்று உண்டு. விழவேண்டியவற்றை அனுமதித்தால், அதை நீங்கள் அணுகிவிட முடியும்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...