Skip to main content

உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?

சிவசங்கரன் என்பவர் ஸ்ரீமடத்தின் நெடுநாளைய பக்தர். ஒரு முறை அவர் தரிஸனத்துக்கு வந்த போது, ஒர் அனுக்கத் தொண்டர், அவரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டு விட்டார்.

சிவசங்கரனுக்கு எல்லையில்லாத வருத்தம். உடனே தான் பட்ட அவமானத்தை ஓடி சென்று பெரியவாளிடம் புகார் செய்கிற அநாகரீகர் இல்லை அவர். பெரியவாளிடம் தனித்துப் பேசக்கூடிய வாய்ப்பு வந்தது.

மடத்துத் தொண்டர்களில் சில பேர்கள் துஷ்டர்களாக இருக்கிறார்கள். தவறு செய்கிறார்கள். பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவா இப்படிப் பட்டவர்களையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிதான் சமாளிக்க முடிகிறதோ…” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி சொல்லி விட்டார்.
பெரியவாளுக்கு ஒரே சிரிப்பு. நீ சொல்கிற தகவல் எனக்கு ஒன்றும் புதுசில்ல”என்று ஒரு பார்வை. பின்னர் சொன்னார்:

ஆயிரம் பேர் வேலை செய்கிற ஒரு பாக்டரியில் எல்லாத் தொழிலாளர்களும் திறமைசாலிகளாக, யோக்யர்களாக, ஸின்ஸியராக இருக்கிறார்களா?
அரசாங்கத்தில் லட்சகணக்கான பேர் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஒரே லெவலில் இருப்பதில்லை. நிறையப் பேர் வேலை சரியாகச் செய்வதில்லை; அல்லது, தப்பும் தவறுமாகச் செய்கிறார்கள். அவர்களை அப்படியே வீட்டுக்கு அனுப்ப முடியல்லே. அவர்களை வைத்துக் கொண்டே தான் ராஜாங்கம் நடக்கிறது.
ஏனென்றால், அரசும் – அதற்கு ஒரு தலைமையும் – அவசியம்.

தலைமை சரியாக இருக்கான்னு பார்த்தாலே போதும். அவ்வளவுதான் முடியும்.

ஸ்ரீமடம் ஒரு சமஸ்தானம். பல வகையான சிப்பந்திகள் இருக்கத் தான் செய்வார்கள்…” என்று சொல்லிவிட்டு,“உனக்கு பரமேசுவரனை தெரியுமோ?”என்று கேட்டார் நம் உம்மாச்சி தாத்தா.

சிவசங்கரனுக்கு ஐந்தாறு பரமேசுவரன்களைத் தெரியும். அவர்களில் யாரை குறிப்பிடுகிறார்கள் என்பது புரியாமல் விழித்தார்.
நான் கைலாசபதி பரமேஸ்வரனைச் சொன்னேன்… அவர் கழுத்தில் பாம்பு இருக்கு. கையில் அக்னி, காலின் கீழ் அவஸ்மாரம் இருக்கு. அவருடைய ருத்ரகணங்கள் எல்லாம் பிரேத, பைசாசங்கள் ! இத்தனையையும் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு தான் அவர் உலகம் பூரா சஞ்சரிக்கிறார். நடனமும் ஆடறார்.

“பாம்பைக் கீழே போட்டுவிட்டால் அது திரிந்து எல்லோரையும் பயமுறுத்தும், கடிக்கும்.

நெருப்பை கீழே போட்டால், வீடு – காடு எல்லாவற்றையும் அழிச்சிடும்.

அபஸ்மார தேவதையை போக விட்டால், கண்ட பேர்களையெல்லாம் தாக்கி மயக்கம் போடச் செய்யும்.

ப்ரேத – பைசாசங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

இப்படி துஷ்டர்களை தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது தான் பரமேசுவரனுடைய பெருமை!”

சிவசங்கரன் அசந்து போய் நின்றார். பெரியவா ஏதோ சமாதானம் சொல்லித் தன்னை அடக்குவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், என்ன தெள்ளத் தெளிவான உலகியலை ஒட்டிய பதிலைக் கூறி விட்டார்.

உம்மாச்சி தாத்தா சாக்ஷாத் பரமேஸ்வரனே!!

HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA|| ஹரஹர சங்கரர் ஜெய ஜெய சங்கர|| हर हर शंकर जय जय शंकर ||

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...