Skip to main content

பூஜையறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

இறையருளை ஈர்க்க பூஜையறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

வீடு என்பது வெறும் கல்லும், மண்ணும் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. பல உயிர்கள் உரையுமிடம். எந்தவொரு வீடும் அதன் ஆசியையும், இலட்சணத்தையும் அதன் பூஜை அறையின் மூலமே பெறுகிறது. சிறிய இல்லமாக இருந்தாலும் கூட வெறும் கடவுளின் படத்தை வைத்தே பூஜிக்கும் முறை ஏராளமான இல்லங்களில் உண்டு.

ஒரு வீட்டிற்கான ஆசியை அதிகரிக்க செய்வதும், நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் இழுப்பதும் இந்த இடம் தான். எல்லா இந்துக்களின் வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறிதாகவோ பெரியதாகவோ வைத்திருப்பார்கள்.

இதை வெறுமனே பூஜையென முறையின்றி செய்துவிடாமல் சாஸ்திரங்களும், நம் ஆன்மீக சான்றோர்களும் சொல்வதஇ பின்பற்றுகிற போது அதற்குரிய பலன்கள் அபரிமிதமானதாக இருக்கும். பூஜையின் போது அணிய வேண்டிய ஆடைகளை பற்றியும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. துர்கை போன்ற தெய்வங்களை வணங்கும் போது சிவப்பு ஆடைகளும். சிவனை வணங்கும் போது வெண்மை நிற ஆடைகளும், விஷ்ணுவை வணங்கும் போது மஞ்சள் அடையும் அணிவது சிறந்தது.

இது மட்டுமின்றி பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதையும் சாஸ்திரங்கள் சொல்கின்றனர், பூஜை அறையில் பூஜையின் போது அது எந்த தெய்வங்களாக இருப்பினும் அரிசி நெய்வைத்யம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ஏனென்றால் அரிசி இறைவனின் உணவாக கருதப்படுகிறது. அரிசியை தவிர்த்து ஏலக்காயும் வெற்றிலையும் மிக அவசியமாக பூஜை அறையில் வைக்க வேண்டியவைகள். பூஜையில் ஏற்றப்படும் விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்காமல் ஸ்திரமாக எறிவது நல்ல சகுனத்தை தெரிவிப்பதாக அமையும். மலர்கள் தண்ணீர் மற்றும் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது இந்த மூன்றும் பூஜையின் மிக முக்கியமான அம்சங்கள்.

எந்த திசையிலும் வைத்து வணங்கிவிடலாமா? எந்த புறத்திலும் இருந்து பூஜை செய்து விடலாமா என்றால் இல்லை. அதற்கென முறைகள் உண்டு, நாம் அமர்ந்து பூஜை செய்யும் ஆசனமும் மிக புனிதமானதாக கருத வேண்டும் அதை அங்கும் இங்கும் மாற்றி வைக்க கூடாது அதை கால்களால் தள்ள கூடாது. மேலும் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வாஸ்து தோஷங்கள் மறையும் என்பது ஐதீகம்.

சில பூஜை அறைகளில் எண்ணிக்கையில் அதிகமான படங்களை வைத்திருபார்கள், ஆனால் படங்கள் சிறிதே ஆனாலும் முறையாக பூஜைகள் செய்கிற போது அந்த இடத்தினுடைய ஆற்றல் பெருகி நாம் வேண்டுவது கிடைக்க கூடிய சாத்தியங்களை அதிகரிக்கும் என்பது நம்பிகை.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...