Skip to main content

பற்றுதலை நீக்க வழி

ஆசை என்ற பற்றுதல் இல்லாமல் வாழ்க்கையை நடத்து என்று பகவத் கீதையும் மற்ற நீதி நூல்களும் கூறுகின்றன.

ஆனால் இதை நடைமுறைப் படுத்துவது எவ்வாறு?

பற்றுதல் என்பது மனதின் இயல்பாயிற்றே?

பற்றுதலை நீக்குவது என்பது மனதின் இயல்புக்கு எதிரான செயல் அல்லவா?

இயற்கைக்கு எதிராக செயல்படுதல் என்பது இயலாதே?

மனம் உள்ளவரை ஆசை என்பதும் பற்றுதல் என்பதும் இருந்தே ஆக வேண்டுமே!

பிறகு இந்த உலக இன்பங்களின் மேல் உள்ள பற்றுகளைத் துறப்பது எவ்வாறு?

ஏதேனும் வழி உள்ளதா?

ஆம். வழி இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு."

என்கிறார்.

ஆசைகளை விட நினைக்கிறாயா?

பற்றுகளைத் துறக்க நினைக்கிறாயா?

ஆசை, பற்றுகளற்று எவன் ஒருவன் இருக்கிறானோ அவனிடம் ஆசை கொள்.

அவனைப் பற்றிக்கொள்.

இதுவே உலக ஆசைகளையும் பற்றுகளையும் விடுவதற்கான வழி என்கிறார்.

ஆசைகளற்று உலகில் ஒருவர் இருக்கிறார் என்றால் இறைவனைத் தவிர வேறு யாராக அது இருக்க முடியும்?

துன்பங்களைத் தரக்கூடிய உலகப் பொருட்களின் மேலிருந்து விடுதலை பெற ஆசையை அடியோடு நீக்க வேண்டியதில்லை.

ஒரிடத்திலிருத்து ஆசையை, பற்றுதலை மாற்றி வேறிடத்தில் வைக்க வேண்டும் அவ்வளவே.

ஆசை, பற்றுதல் என்பது மனதின் இயல்பு.

இயற்கையின் படைப்பு. அதனால் மனிதன் உலகில் உள்ள பொருட்களில் பற்றினை வைக்கிறான்.

ஆனால் என்றோ ஒரு நாள் இயற்கை மனிதனின் முகத்தில் அறைந்து நிலையாமையைப் புரிய வைக்கிறது.

நாம் நேசித்தது இல்லாது போனால் மனமானது பற்றிக் கொள்ள இடம் தெரியாது அலைகிறது.

மனதில் மிகப் பெரிய வெற்றிடம் சுமையாக மாறிவிடுகிறது.

இதனால் மனிதன் நிலைகுலைந்து போகிறான்.

இறை நம்பிக்கை உடையவனோ இந்த நிலையிலிருந்து எளிதில் மீள்கிறான்.

மனமானது என்றும் நிரந்தரமான அழிவில்லாத பரம்பொருளை பற்றிக் கொண்டு துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறது.

ஞானத்தை அடைந்த மகான்கள் இறை பக்தியை மட்டும் விட்டதே இல்லை.

ஞானிகளுக்கும் மனதில் ஆசை, பற்றுதல், கோபம் போன்ற உணர்ச்சிகள் உண்டு.

இல்லாவிடில் இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் தோன்றியே இருக்காது.

மனதில் இருந்த ஆசைகள் சிருங்கார ரசமான கவிதையாக வெளிப்பட்டது.

மனதில் உள்ள கோபம் யுத்த காண்டமாக வெளிப்பட்டது.

மனதில் உள்ள உணர்ச்சிகளை நீக்குவது என்பது இயலாது என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

எனக்கு கோபமே வராது என்று ஒருவர் கூறினார் என்றால் அவர் பொய் சொல்கிறார் என்றே அர்த்தம்.

சாதாரண மனிதர்கள் தன் மனதில் எழும் உணர்ச்சிகளை அனுபவித்துக் கரைத்துக் காணாமல் போகிறார்கள்.

ஞானிகள் அதை பக்தியாக மாற்றி காலத்திற்கும் அழியாது புகழோடு வாழ்கிறார்கள்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

ஓம் நமச்சிவாய..

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...