பரம்பொருளானவர் எங்கும், பல்வேறு பொருள்களில் பல்வேறு குணங்களின் மூலமாகத் தோன்றியிருப்பதால்தான் நமக்கு இன்பம் உண்டாகிறது.
அவைகள் யாவும் நம்மைச் சார்ந்தவையே என்கிற எண்ணம் உதிக்கிறது.
அந்த இன்பமான உணர்வு தோன்றக் காரணம் என்ன ?
அதற்கும் நமக்கும் ஏதோ தொடர்பிருப்பதே அந்த இன்ப உணர்வுக்குக் காரணம்.
குழந்தையாப் பார்த்த உடன் தாயுள்ளமும், தாயைப் பார்த்த உடன் குழந்தை உள்ளமும் துள்ளுவது எதனால் ?
ஏனெனில் அவர்களுக்கு தங்களுக்குள் உள்ள உறவு தெரியும்.
இதைப் போன்றே எல்லாப் பொருளிலும் பரம்பொருள் இருக்கிறான் என்பதை உணரவேண்டும்.
என்னிடம் இருக்கும் இறையாற்றலே எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று எண்ணி உணர்வதே இன்பமடையும் உபாயமாகும்.
எல்லா இடத்திலும் அன்புத் தொடர்பை அமைத்துக் கொண்டால்தான், எல்லையில்லாத பரம் பொருள் ஒவ்வொரு அணுக்களிலும், திவலைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதைக் காணமுடியும்.
அப்படிப்பட்ட காட்சியும், அக்காட்சியைக் காணும் சக்தியும் பெற்று விட்டால் வேறென்ன வேண்டும் ?
ஆனால் இதற்காக பொறிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டியது அவசியம்.
போக வாசனையை விலக்கி, அன்பின் புனித நோக்கு ஏற்பட்டு விடுமாயின் நமக்கு ஒவ்வொரு பொருளிலும் பரம்பொருளின் இருப்பு தெரியும்.
இப்படி எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மா ஒன்று திரண்டு கண்முன்னே வந்தால் என்னவாகும் ?
இந்த நிலை அர்ஜுனனுக்கு ஏற்பட்டதாகக் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியே வெலவெலத்துப் போய்விடுவான்.
ஒரு மாவீரன் கதியே இப்படி என்றால் நமது நிலை ? சிறிய சகுணமான அழகிய உருவத்திடம் தோன்றும் அன்பும், என்னைச் சேர்ந்ததென்ற உணர்ச்சியும், இன்பமும் விஸ்வரூபத்தைக் காணும் போது ஏற்படுவதில்லை.
எனவே அர்ஜுனன் கிருஷ்ணா, எனக்கு உன் பழைய இனிய உருவத்தையே காட்டும் என்கிறான். ஆக, முக்காலங்களிலும், மூவிடங்களிலும் வியாபித்துள்ள இறைவனே இன்பமானவன்.
அதோ கண்ணெதிரே தெரியும் நட்சத்திரங்கள் எவ்வளவு அழகானவை. சாந்தமாக, அடக்கமாக, மின்மினிப் பூச்சி போலக் கண்களைச்சிமிட்டிக் கொண்டு, எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் என்னுடன் பேசுவது போலல்லவா தோன்றுகிறது ?
அதே நட்சத்திரம் தன்னைக் குறுக்கிக் கொண்டு, தகதகவென எரியும் தீப்பந்தாகி நம் முன்னே வந்து நின்றால் என்னவாகும் ?
சாம்பலாகி விடுவோம். ஆக, பரம் பொருளின் எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில் எது எது எங்கெங்கு இருக்கிறதோ, அது அது அங்கங்கே இருப்பதே இன்பம். அதை மாற்றுவதோ, மாற்ற நினைப்பதோ கூடத் துன்பம்.
காலம் பற்றிய விஷயத்தில் கூட இது பொருந்தும். நமக்கு பழைய பிறவிகளைப்பற்றிய நினைவு இருப்பதில்லை. இந்தப் பிறவியிலேயே நிறைய விஷயங்களை மறந்து போகிறோம்.
அதைப் போல வருங்காலம் பற்றியும் எதுவும் தெரியாது. ஊகத்தின் அடிப்படையில்தான் சொல்வோமே தவிர, அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதுதான் நல்லது.
ஒரு கெட்டவன் நல்லவனாகி நம் முன்னே வந்தால் கூட, நமக்கு அவன் கடந்த காலம் நினைவிருப்பதால், அவனிடம் நமக்கு மதிப்பு உண்டாவதில்லை. அவன் எவ்வளவுதான் தன்னை நல்லவன் என்று நிருபிக்க போராடினாலும், அவனது பழைய பாவங்களை நம்மால் மறக்க முடிவதில்லை.
அவன் இறந்து வேறு மனிதனாக வந்தால்தான் உண்டு. எனவே இந்தப் பழைய நினைவுகளினால் மனோ விகாரம் பெருகுகிறது. இப்பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிடும் போது எல்லாம் முடிந்து போகின்றன.
பாவ புண்ணியங்களை மறந்து போவதற்கு இறைவன் கண்ட யுக்தி அல்லது உபாயமே மரணம். இந்தப் பிறவியின் சிரமங்களையே பொறுக்க முடியாமலிருக்கையில், பழைய பிறவியின் குப்பைகளை ஏன் கிளறிக் கொண்டிருக்க வேண்டும் ?
நம் பிள்ளைப் பிராயத்தில் நடந்தவைகளை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இந்த மறதி நமக்கு மிகவும் நல்லது. பொதுவாக மனிதன் தீமைகளை மட்டும் விட்டு விட்டு நல்ல விஷயங்களை நினைவில் கொள்வானாயின் மிகவும் நல்லது.
ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. எனவே காலம் எல்லா வற்றையும் சல்லடையாகச் சலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மறதியின் பொருட்டே மனிதனுக்கு சாவு உண்டாகியிருக்கிறது.
இந்த உலகில் எல்லாமே நல்ல முறையில் அமைந்துள்ளது. காலமும், இடமும் சேர்ந்து உருவாகியிருக்கிற இவ்வுலகை ஒருமித்து சேர்த்து நாம் உருட்டத் தேவையில்லை. அதனதன் போக்கில் அதுஅது இயங்குவதே பேரின்பம்.
அதைப் போல அதிகப் பழக்கத்தில் இன்பமில்லை. சிலவற்றோடு நெருங்கியும், சிலவற்றோடு விலகியும் இருப்பதே இன்பம். ஆசிரியரிடம் பணிவாய் விலகி இருப்போம்.
தாயிடமோ மடியில் போய் அமர்ந்து கொள்வோம். புஷ்பத்தை கையில் எடுப்போம். தீயைக் கண்டு விலகி நிற்போம். எனவே அதனதனுக்குத் தக்கவாறு அதனதனிடம் நெருங்கியோ விலகியோ இருப்பது இன்பம்.
நட்சத்திரம் விஷயமும் அப்படித்தான் எது எது எங்கே இருக்கிறதோ அதை அதை அங்கேயே விடுவதுதான் இன்பம். அதை விடுத்து முரட்டுத்தனமான அதிக நெருக்கமும் பழக்கமும் கொண்டால் இடர் விளையும். காலங்கள் மூன்றும் நம் எதிரில் நில்லாமல் இருப்பதே நல்லது. எனவே உலகில் எவறிடமும், எதனிடமும் பற்றற்று நடுவு நிலையில் வாழ்ந்து வருவதே பேரின்பம்.

Comments
Post a Comment