Skip to main content

உங்கள் வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றுவார்களா?

அப்படி என்றால் இதை நீங்கள் கட்டாயமாக படிக்க வேண்டும்...

பல பேர் வீட்டில் ஆண்கள், விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் போது, ஆண்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா? என்ற ஒரு சந்தேகம் நம்மில் பலருக்கு உண்டு. பெண்களால் விளக்கை ஏற்ற முடியாத சூழ்நிலையில், ஆண்கள் விளக்கை ஏற்றலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால், அப்படி விளக்கு ஏற்றும் போது சில விதிமுறைகளை ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அந்த விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றிய இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டு பெண்களால் விளக்கு ஏற்ற முடியும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, கட்டாயம் பெண்கள் தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர, அந்த பொறுப்பை ஆண்கள் கையில் கொடுக்கக்கூடாது. சரி. ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றும் போது மேல்சட்டையை அணியாமல் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது பனியன் கூட போட்டுக் கொள்ளக்கூடாது. வேட்டியோ அல்லது பேண்ட் அணிந்து கொண்டு தீபம் ஏற்றலாமே தவிர, கைலி(லுங்கி) அணிந்து கொண்டு தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.

பெண்கள் எப்படி நெற்றியில் குங்குமம் வைக்காமல் தீபம் ஏற்றக்கூடாதோ, அதேபோல் ஆண்கள் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் தீபம் ஏற்றக்கூடாது. அது தவறு. நெற்றியில் ஏதாவது ஒன்றை இட்டுக் கொண்டுதான் தீபம் ஏற்ற வேண்டும்.

நெற்றியில் இட்டுக் கொண்ட விபூதியை சிறிது உங்கள் மார்பிலும் பூசிக் கொள்ளுங்கள். முடிந்தால் இருகைகளிலும் பூசிக்கொண்டு தீபத்தை ஏற்றி பாருங்கள். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியே வேறு. ஒரு முறை இந்த விதிமுறையை பின்பற்றி தீபமேற்றும் ஆண்கள், கட்டாயமாக இதை அவர்களே கடைபிடிப்பார்கள். அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சில ஆண்கள் குளித்த உடன் பூஜை அறைக்கு வந்து தீபத்தை ஏற்றினால், அது மிகவும் தவறான பழக்கம். ஈரத்தலையோடு  தீபம் ஏற்றக்கூடாது. ஈரத் துண்டோடும் தீபம் ஏற்றக்கூடாது. ஆண்கள் கிழக்கு பார்த்தவாறு தான் தீபம் ஏற்ற வேண்டுமே தவிர, மற்ற திசைகளில் தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் குளிர வைக்கக் கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபத்தை ஆண்களும் குளிர வைக்கக்கூடாது. தீபம் தானாக எண்ணெய் தீர்ந்து குளிருவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் தீபம் ஏற்றும்போது கவனிக்கப்படவேண்டிய ஒரு சூட்சுமம் உள்ளது. இதை ஆண்கள் கடைபிடித்தால் அதிகப்படியான அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்கிறது சாஸ்திரம். அது என்னவென்று பார்த்து விடுவோம். தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக, தீபத்தின் முன்பு ஒரு பூவோ அல்லது ஒரு ரூபாய் நாணயமோ அல்லது சிறிதளவு அரிசி, இவை மூன்றையும் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் பூ இருந்தால் பூவை வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சிறிதளவு அரிசியை வைத்துக் கொள்ளலாம். அரிசி வைக்க இஷ்டம் இல்லாதவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை கூட வைக்கலாம்.

ஆக மொத்தத்தில் இந்த மூன்று பொருளில் ஏதாவது ஒரு பொருளை விளக்கின் முன்பாக வைத்து, விளக்கை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அதன் பின்பு தீபம் ஏற்ற வேண்டும். இந்த முறையை மட்டும் ஆண்கள் பின்பற்றி பாருங்கள் உங்களாலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

தீபத்தின் முன்பு வைத்த அந்த பொருளை என்ன செய்யலாம்? அடுத்த நாள், பூவாக இருந்தால் காய்ந்த பூவை எடுத்து விட்டு நல்ல பூவை வைத்துக் கொள்ளலாம். அரிசி வைத்திருந்தால் அந்த அரிசியை எடுத்து சாப்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் செலவிற்காக வைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு தவறும் இல்லை. அந்த தீபத்திற்கு மதிப்பு கொடுத்து நீங்கள் செய்யும் சமர்ப்பணம் தான் அந்த மூன்று பொருள்களில் ஏதாவது ஒன்று. இது ஒரு சூட்சும முறை. லட்சுமிகரமான தீபத்தை ஏற்றும்போது அதன் பலனை முழுமையாகப் பெறுவதற்கு நம் முன்னோர்கள் நமக்காக சொல்லி வைக்கப்பட்டுள்ள சாஸ்திரம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முறையை ஆண்கள் மட்டும் தான் பின்பற்ற வேண்டுமா? பெண்கள் பின்பற்ற கூடாதா என்ற கேள்வி கட்டாயம் எழும். பெண்களும் இந்த முறையை பின்பற்றலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. இது பல பேருக்கு தெரியாது. தெரிந்தவர்கள் இன்றும் இந்த பழக்கங்களை கடைப்பிடித்து தான் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், தங்கள் குடும்பத்தை விட்டு தனியாக தங்கி இருப்பார்கள் அல்லவா! அந்த இடங்களில் ஆண்களுக்கு தீபமேற்றும் பழக்கம் இருந்தால் கூட, இந்த சூட்சம முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...