எந்தத் திசையில் பார்த்தாலும் நம்மை நோக்கிச் சுழலுமாம் இந்த அதிசய லிங்கம்!
இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார்.
ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார்.
அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய
சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே!
இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.
அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே!
அப்படியே இருந்தாலும் அந்தத் திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார். அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது.
இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது

Comments
Post a Comment