🌜மூன்றாம் பிறையை வெறுமனே பார்த்தால் உடனே பலன்கள், சக்திகள் வந்திடுமா?🌛
🌙எந்தப் பொருளையும் கண்களால் பார்த்திடில் *உள்ளம், மனம், உடல், உயிர் நாளங்களில் எண்ண எழுச்சிகள், மனமாற்றங்கள், உணர்ச்சிகள், காமம், குரோதம், லோபம், மதமாச்சர்யம், கோப உணர்ச்சிகள்* தோன்றுகின்றன அல்லவா!
🌙காமம், ஆசைகள், பேராசைகள், முறையற்ற உணர்வுகளுக்கும் கண்கள் பார்க்கும் போது எழும் மனப் பிரதிபலிப்புகளே காரணமாகின்றன.
🌙அதாவது கண்கள் எதைப் பார்க்கின்றனவோ, அவற்றின் தன்மைகளைப் பொறுத்து, பல மாற்றங்கள் உடல், மனம், உள்ளத்தில் ஏற்படுகின்றன.
🌙ஆலயத்தில் கடவுள் தரிசனம் என்றால் கண்களால் பார்ப்பது தானே. பிறகு தாமே மனம், உள்ளத்தில் இறை ஈடுபாடுகள் எழுகின்றன. இதிலும் பக்தி உணர்ச்சிகள், நல்லெண்ணங்கள் எழுகின்றன அல்லவா.
🌙இதைப் போலத்தான் *மூன்றாம் பிறை என்பது உடல், மனம், உள்ளத்தில் நம் நினைவாற்றல் கூடும் வடிவில் எண்ணற்ற நல்மாற்றங்களை* ஏற்படுத்துகின்றது.
🌙ஆம், *கண்கள் பார்க்கும் போது மனம், உடல், உள்ளத்தில் நன்மையான அம்சங்களை மட்டுமே தோற்றுவிக்க வல்ல மூல தெய்வீக சாதனங்களுள் ஒன்றே மூன்றாம் பிறை* தரிசனமாகும்.
🌙எனவே இனியேனும் வாழ்வில் தவறாது உங்கள் பிள்ளளைகள், பெண்கள், பேரக் குழந்தைகளுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்றுத் தாருங்கள்.
🌙இது நல்வித்துக்களை விதைத்து நல்வரங்களைப் பெற்றுத் தருவதாகும்.
🌜ஒவ்வொரு மூன்றாம் பிறையும் *அந்தந்த நாளின் நட்சத்திர,யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, பல அற்புதமான நல்வரங்களைத் தருகின்றது*. “வெறும் மூன்றாம் பிறைத் தரிசனம்தானே அப்படி என்ன அது விசேஷமான சக்திகளைத் தந்து விடப் போகின்றது?” - என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.🌛
🌙முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தெய்வ மூர்த்தியரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை
*ஸ்ரீசந்திர சூட சிவ தரிசனமாக, ஸ்ரீசந்திர மௌலீஸ்வர தரிசனமாக, ஸ்ரீசந்திர சேகர தரிசனமாகவும்*
- போற்றி வழிபடுவதால்,
🌙நாம் தேவாதி, தேவ, தெய்வாதியருடன் இணைந்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுகின்றோம் என்ற உத்தம பாக்ய நிலையின் மகத்துவத்தை உணர்ந்திடுவோம்
🌙மனதைச் சுத்திகரிக்கும் தரிசனம்.
🌙மனதால் செய்த பாவங்களுக்கு நல்ல விமோசனம் தரும் தரிசனம்.
🌙குறிப்பாக, வாயால் பேசிய தீய வார்த்தைகளுக்கும், மனதால் பேசிய கொடிய வார்த்தைகளுக்கும், மனதில் உருவாகும், விகாரமான கேவலமான எண்ணங்களுக்கும் தக்க பிராயச் சித்தத்தைத் தரக் கூடிய தரிசனம்.
🌙சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கமான நற்குணத்தைத் தர வல்ல தரிசனம்.
🌙வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று ஏங்கி வருந்துவோர்க்கு வேத மந்திரப் பலாபலன்களைத் தர வல்ல தரிசனம்.
🌙வெளியில் சொல்ல இயலாதபடி விகாரமான எண்ணங்களில் உழல்வோருக்கு, மனசுத்தியைப் பெற உதவும் பரிகாரங்களைத் தரும் தரிசனம்.
🌙இவ்வாறாக, வானில் சில நிமிடங்களே தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மனவளப் பலன்களை அபரிமிதமாகத் தர வல்லதாம்.
🌙உண்மையில் *மனம் அமுத ஒளி நதியில் புண்ணியமயமாகப் புனித நீராடுவதாகவே, சித்தர்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பாங்கினைக் குறிக்கின்றனர்*.
🌛ஒரு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே தரிசிக்க வல்ல மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், நம் உடலில் எத்தனையோ விதமான நல்நாள மாற்றங்களை ஏற்படுத்துகின்றன🌛
🌙 ஈஸ்வரன் தன் சிரசில் சூடியிருக்கும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன வடிவாகத் துலங்குவதால், *ஆத்மப் பிரகாச ஈஸ்வர ஜோதியானது (சிவம்), ஆத்மப் பிரகாசம் கொண்ட இருதயப் பிறையுடன் ஆத்மக் கிரண சங்கமம்* கொள்வதால், மூன்றாம் பிறைச் சந்திர தசனம் மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டதாகும்.
🌙மூன்றாம் பிறை வானில் தெரிகின்ற போது, *நன்கு நிமிர்ந்து நின்று, பின்காலை உயர்த்தி, மூலபாத யோக நிலையில் நின்று* மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று,
💢
“சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர பாஹிமாம்
சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர ரட்சமாம்”
💢
- என்று 36 முறை ஓதி,
🌙தன்னையே 10 முறையேனும் ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வருதல் வேண்டும்.
💢
“ஒன்றுள் ஒன்றியே ஒன்றில் ஒன்றாகி
ஒன்றென ஓதியே மூன்றில் ஒன்றாகி
ஒன்றில் ஒன்றிய ஒன்றுடையான்தனை
ஒன்றி ஒன்றுவோம் மூன்றில் ஒன்றாய்!”
💢
- என்று *சந்திர சக்தித் துதிகளை* ஓதுதல் மிகவும் விசேஷமானதாகும்.

Comments
Post a Comment