Skip to main content

ஆலமரத்தைச் சுற்றி வர வேண்டுமா?

கோயில் தரிசனம் நடத்துபவர்கள் கண்டிப்பாக ஆல மரத்தையும் வலம் வர வேண்டும் என்று கூறுவது ஓர் நம்பிக்கை மட்டுமல்ல. இதன் பின் மகத்தான ஓர் சாஸ்திரமும்  அடங்கியுள்ளது.

 *#"மூலதோ: பிரம்மரூபாய, மத்யதோ: விஷ்ணுரூபிணே, அக்ரத: சிவ ரூபாய, வ்ருக்ஷராஜாய தே நம:"*
    # இந்த மந்திரம் ஜெபித்து ஏழு முறை ஆலமரத்தை வலம் வர வேண்டும் என்பது விதி. பஞ்சாமிருதத்தின் நன்மைகள் தேவ விருட்சமான ஆலமரத்தை சுற்றி வரும் போது கிடைக்கப் பெறும் என்று ஆச்சாரியர்கள் கூறியுள்ளனர்.
     🌱ஒன்றாவதாக விஸ்வம் முழுதும் நிரம்பி நிற்கும். ஸ்ரீ பரமேஸ்வரனின் நினைவு நமக்குள் நிறையும்.
    🌱மிகப் பயன் தரும் ஓர் உடற்பயிற்சியாக ஆலமரத்தைச் சுற்றுவதை நாம் கருதலாம் என்பது இரண்டாவது பலன்.         

      🌱நமது உடலுக்குத் தேவையான வாயுவும் ஒளியும் வலம் வரும் போது நாம் பெறுகின்றோம். ஆலமரத்திலிருந்து மிகுதியான பிராணவாயு (ஆக்சிஜன்) சுற்றி வலம் வரும் பக்தர் சுவாசிக்கலாம்.

     🌱கடைசியாக ஆலமரத்தின் நிழல், சுற்று வரும் பக்தருக்கு குளுமை அளிக்கின்றது. ஆலமரத்தை வலம் வரும் போது பஞ்சாமிருதத்தின் நற்குணங்களை அடையலாம் என்பது கண்டறிந்தோம். ஆலமரம் வாயுவிலிருந்து கார்பனை உட்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடுகின்றது. எல்லா தாவரங்ளும் இவ்வாறே சிறுதண்டுகளும் இலைகளும் இருக்கும் அமைப்பின் விளைவாக எப்போது வாயுவை அசைவாடச் செய்து கொண்டிருக்கின்றன. ஆதலால் மிக அதிகம் ஆக்சிஜன் வெளியே விட ஆலமரத்துக்கு இயல்கின்றது. மேலும் சிறிதளவாவது ஓசோன் உற்பத்தி செய்யவும் ஆலமரம் திறன் பெற்றிருக்கின்றது. இது வாயுவை விட பொருள் அடர்த்தியுடையதனால் ஆலமரத்தின் கீழே தங்கி நிற்கின்றது. இது வாயுவை சுத்தம் செய்து சுவாச கோசத்திலுள்ள அணுக்களை அழிக்கின்றது. இதனால் நம்முன்னோர்கள் ஆலமரத்தை வலம் வருவதை கட்டாயமாக்கி கோயில் விதிகளை வகுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...