Skip to main content

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது, ஏகாதசி அன்று
“பகவான் கண்ணன் நீண்ட நாட்களாக வரவேயில்லையே!.. அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் “என்று குந்தி தேவி சுவையான பால் பாயசத்தை
செய்து தான் வழிபடும் ஶ்ரீ கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது,  அங்கு ப்ரத்யக்‌ஷமாக
ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா
குடிலின் வாயிலில் நின்று
“அத்தை” என்று கூப்பிட, குந்தி தேவி அந்த பாயச
பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு “ என் கண்ணா,மணிவண்ணா வா”என்று அன்போடு வரவேற்றார்.

உடனே கண்ணன்,”அத்தை பார்த்தாயா.. நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன்.. பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது” என்றான். குந்தி தேவி ஶ்ரீ கிருஷ்ணன் கையைப் பிடித்து அமர வைத்து, “ஒரே நிமிடம் கிருஷ்ணா.. உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டுவருகிறேன்” என்று கூற “எங்கே அனைவரும் “என கண்ணன் கேட்க, அதற்கு குந்திதேவி,
“கண்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள்” என்றதும் ஶ்ரீ கிருஷ்ணன், “ பாவம் அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள்.. காட்டில்.. “என்று பெருமூச்சு விட்டு,”இது இன்னும் சில காலம் தான்.. எல்லாம் மாறும்” என்றவுடன் கண்ணீருடன் குந்தி தேவி, “ கண்ணா கர்ம வினையை அனுபவிக்கிறோம் இருப்பினும் அகில லோக நாயகன் நீ உனக்கு தெரியாதா எப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று..நீ எங்களுடன் இருப்பதே அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக நாங்கள் இருக்கிறோம்.... எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன்.. இதோ ஒரு நிமிடம்” என்று சிறிய அண்டா போன்ற மண்பாத்திரதை உள்ளே கொண்டுசென்று, பாதி பாயசத்தை தனக்கும், தன் புதல்வர்களுக்கும், திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கண்ணனுக்கு எடுத்து வந்தார் குந்தி தேவி.

ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா புன் சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து “ஆஹா என்ன சுவை.. அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான்.. எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும்” எனக் கேட்க,  தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்தி தேவி செய்வதறியாமல் உள்ளே சென்று வேறு வழியில்லாமல் அதை எடுத்து மனதில் “புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே”என்று நினைத்துக் கொண்டே கண்ணனிடம் கொடுத்தாள்.. அதை வாங்கிய பரமாத்மா, “ கொடு” என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு, “இப்போதுதான் திருப்தியானேன்” என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு வெளியே சென்று மறைந்துவிட்டான்... 

 குந்திதேவி ஶ்ரீ கிருஷ்ண விக்ரஹத்திடம் சென்று “கண்ணா ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே..நான் எதேனும் தவறு செய்து விட்டேனா மாதவா” என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி கண்ணன் குரலில் வந்தது “அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன்..என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா..உள்ளே சென்று பார்...நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும், தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன்.. என் பிரசாதம் கிடைக்க நீங்கள் அனைவரும் பல ஜென்மத்தில் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். இதுவும் என் லீலைதான்“

இதைக்கேட்ட குந்தி தேவி ஆனந்தக் கண்ணீருடன் “பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்து, நீ உலகிற்கே தாயாக இருக்கும் பொழுது, தாய் நான்தான் என்ற மமதையில் தவறு செய்துவிட்டேன்.. என்னை மன்னித்துவிடு என்று கூறி, உள்ளே சென்று பாயசத்தை எடுத்து “கிருஷ்ணா” என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள்.. பீமனுக்கு ஒரே சந்தோஷம் “நமோ கிருஷ்ண.. நமோ கிருஷ்ண..” என்று கூறி தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

நமெக்கெல்லாம் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான் தாயும் தந்தையும். இந்த மிகவும் கடுமையான சோதனைக் காலத்தை மாற்றுவான்,
நம்மை வாழவைப்பான் என்ற நம்பிக்கையில் ஶ்ரீ கிருஷ்ண நாமத்தை தொடர்ந்து ஸ்மரணம் செய்வோம்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...