Skip to main content

அருள்

*அருள் என்றால் என்ன....???*

எப்படி ஈட்டுவது...???

அருள் நிரம்பிய வாழ்க்கை இருந்தால் வாழ்க்கை இனிமையானதும் மேன்மையானதுமாக இருக்கும்.

படித்து, உழைத்து பொருளை ஈட்டி விட்டோம்.

அருளை ஈட்டுவதற்கு ஞானத்தை தேடி குருவின் காலடியில் அமர்ந்து இருக்கிறோம்.

அருள் என்ற சொல்லுக்கு நேரடியான விளக்கம் ‘இறைத்தன்மை’ என்று பொருள். Godliness.

இறைத்தன்மை என்ற சொல்லில் இறை என்ற ஒரு சொல், மற்றும் தன்மை என்ற மற்றொரு சொல் இருப்பதை காண்கிறோம்.

பொருள் தன்மை என்றால் லட்டு இனிப்பானது என்பதில் லட்டு தோற்றம், அதன் தன்மை இனிப்பு தன்மை. Sweetness.

இனிபுத்தன்மை என்று கூறுகிறோம். sweet என்பது பொருள். ness என்பது தன்மை.

அப்போ இறைத்தன்மை என்றால் இறைவன் என்ற பொருள் இருக்க வேண்டும்,

அப்போதுதானே தன்மை வரும்.

அதைத்தான் வள்ளுவர் இறைவன் பொருள் சேர் இறைவன் என்பது பொருள், மற்றும் அந்த பொருளுக்கு என்ன அர்த்தம்...???

உதாரணமாக மாம்பழம் என்பது வெறும் தோற்றம் மட்டும் இல்லை. ஏனெனில், அதன் சுவையைத் தான் மாம்பழம் என்று உணர முடியும்.

எப்போது என்றால் அதை சுவைத்துப் பார்க்கும்போது மட்டுமே உறுதி செய்ய முடியும்.

ஏனெனில், மெழுகால் செய்யப்பட்ட மாம்பழத்திற்கு அதன் வடிவமும் உண்டு,

இரசாயனத்தை பயன்படுத்தி வாசனையும் உண்டாக்க முடியும்.

ஆனால் சுவையை மட்டும் உண்மையான மாம்பழத்தால் மட்டுமே கொடுக்க முடியும்.

பொருள் என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு. வடிவம், (object) உட்பொருள் (meaning).

அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தோற்றம் இருக்கிறதா...??? இல்லையா...???

மாம்பழத்திற்கு தோற்றம் உண்டு தானே..!

ஆனால் மாம்பழம் தோற்றமா....??? தன்மையா...???

தன்மைக்கு தோற்றம் இருக்குமா...??? இருக்காதா...???

ஒரு மலர் மலர்ந்தால் மலரா...???,

இல்லை அதன் வாசனை வெளிப்பட்டால் தான் மலரா...???

வாசனை வந்தால் தானே நாம் மலாராக ஏற்றுக் கொள்வோம்.

வாசனை இல்லையே அது காகிதப் பூவாகி விடுமே.

மலருக்கு தோற்றம் உண்டு, ஆனால் வாசனைக்கு தோற்றம் இல்லை தானே..!

அப்போ இறைவன் என்ற சொல்லுக்கு தன்மை என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாமா...???

மலர் என்றால் வாசனை என்ற தன்மை,

பழம் என்றால் சுவை என்ற தன்மையும்,

சூரியன் என்று சொன்னால் வெளிச்சமும், வெப்பமும் என்ற தன்மையும்,

இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு சொல் அதன் புறத் தோற்றத்தை குறிப்பது அல்ல, மாறாக, அதன் அகத் தன்மையை குறிப்பது.

அப்போ இறைவன் என்ற சொல்லும் தன்மையைத் தான் குறிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லையே.

நாம் கோவிலில் காணும் இறைவனை தன்மையை பார்க்கிறோமா....???

இல்லையே தோற்றத்தை தானே பார்க்கிறோம்.

அப்போ அது இறைவனா...???

இது நாத்திகம் அல்ல.

உண்மையான ஆத்திகத்தை நோக்கிய பயணம்.

இறைவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தன்மை.

அந்த தன்மையை உணர்ந்தவர்களுக்கு “இருள் சேர் இரு வினையும் சேரா”

துன்பம் தரக்கூடிய பழ வினையும், புகுவினையும் துன்பம் தராது.

இறைவனை உணர வேண்டுமென்று சொல்லவில்லை,
மாறாக இறைத் தன்மையை உணர்ந்தவர்களுக்கு உனக்கு துன்பம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்..

இறைத் தன்மையை உணர்வது ஆன்மிகம்..

ஆன்மீகத்தில் நிறைந்திருப்பது அருள்..

அருளில் அடக்கமுற்று இருப்பது ஆனந்தம்

அருளும் ஆனந்தமும் அகத்திலே மலரட்டும்

*அருள் நிறைந்த ஆனந்தத்தில் : உள் முக பயணம்..!*

*ஓம் நமச்சிவாய...!*

*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...