Skip to main content

திருநீறும் ருத்ராட்சமும்

ஒரு ஊரில் ஒரு திருடன்
அவன் திருடாத இடமே இல்லை.
ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர்
ராஜாவிடம் சென்று
முறையிட்டனர்.
அந்த திருடன் ராஜா இடமும்
சிக்காமல் சாமர்த்தியமாக தப்பித்து
தப்பித்து வந்தான்.
ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல்
இந்த திருடனை பிடித்துத்தந்தால்
ருபாய் ஐந்து லட்சம் என
ஆணையிட்டார்.

"இது ஒருபுரம் இருக்காட்டும்"
சில நாட்கள் கழித்து அந்த ராஜா
மந்திரியை அழைத்து, யார் பற்று இல்லாமல்
இருகின்றார்களோ அவருக்கு என்
ராஜாங்கத்தில் பாதி
தந்துவிடுகின்றேன். என
அறிவித்து. நீங்கள் சென்று யார்
பற்று இல்லாமல் உள்ளார் என
தேடிபார்த்து அழைத்து வாரும் என
ஆணையிட்டார்.
மந்திரி தேடி செல்லும் போது இந்த
திருடன் அவரிடம் வசமாக
மாட்டிக்கொண்டான்.
மந்திரியின் சூழ்ச்சியினால் உன்
தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என
கூரியுள்ளார். நான் சொல்வது
போல் நீ நடித்தால் உனக்கு இருபது
லட்சம் தருகின்றேன், மேலும்
உன்னையும் தப்பிக்க
வைக்கின்றேன். என உறுதி
அளித்தான்.

சரி என இந்த திருடனும்
சம்மதித்தான்.
அந்த திருடனுக்கு ,
*திருநீறும் ருத்ராட்சமும்* போட்டு -
ஒரு சன்யாசி போல் வேடமிட்டு நீ
இந்த மரத்தின் கீழ் அமைதியாக
அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா
வந்து எதை தந்தாலும் வேண்டாம்
என்று சொல்,
கடைசியாக அவர் தன்
ராஜியத்தில் பாதியை உனக்கு
தானமாக தருவார். அதை வாங்கி
என்னிடம் தா,
நான் உனக்கு பேசியது போல்
இருபது லட்சம் தருவேன். என
ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.

பின் அந்த மந்திரி ராஜாவிடம்
சென்று ஒரு சன்யாசி
பற்றுகளைவிட்டு மரத்தடியில்
அமர்ந்து உள்ளார். அவரை
தரிசித்து தங்களின் வேண்டுதளை
நிறைவேற்றிக் கொள்ளுங்கள்
என்றார்.
ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள
அந்த சன்யாசி (திருடன்)யின்
காலில் விழுந்து வணங்கி, ஐயா
தங்களுக்கு தானமாக ஒரு லட்சம்
பொன்மலை தருவேன் அதை
எற்றுக்கொள்க என,
இந்த சன்யாசி *வேண்டாம்*
என்றார்.
பின் ஐந்து லட்சம் பத்து லட்சம்.
இருபது லட்சம், ஐம்பது லட்சம் என
உயர்ந்த, நகை, பணம், என
தானமாக தந்தார்.
இந்த சன்யாசி எதுவும்
*வேண்டாம்* என்றார்.

பின் ராஜா *நீயே சத்தியசீலன்* என்
ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு
தானமாக தருகின்றேன். நீங்கள்
அதை பெற்றுக் கொண்டு எனை
வாழ்த்த வேண்டும் என்றார்.
(இப்போது தான் மந்திரிக்கு
சந்தோஷம் நாம் சொன்னது
போலவே நடிக்கின்றான் என தன்
மனதுக்குள்ளே சிரித்து
மகிழ்ந்தான்)
ஆனால் அந்த சன்யாசி
*வேண்டாம்* என்றார்.
(மந்திரிமுகம் மாறிவிட்டது
அடப்பாவி வேண்டாம்
என்றுவிட்டானே,
இவனை இப்போது திருடன்
எனவும் நாம் சொல்ல முடியாது,
என்ன செய்வது என மனதுக்
உள்ளே குழம்பத்தில் நிற்க)

கடைசியாக அந்த ராஜா தன்
மகளையே தங்களுக்கு திருமணம்
செய்து தருகின்றேன் என
கூரினார்.
அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன்
எனக்கு எதுக்கு இது எல்லாம்
*வேண்டாம்* என்றார்.
*நீறே தீர்க்கதரிசி* என வீழ்ந்து
வணங்கி அந்த ராஜா
சென்றுவிட்டார்.
பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி
என் வயத்துல இப்படி மண்அள்ளி
போட்டு விட்டாயே இது நியாயமா
என சண்டை போட,
அதற்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.

எப்போது நீங்கள்
*திருநீறும் ருட்ராச்சமும்* என் மீது
தரித்தீர்களோ அப்போதே என்
மனம் மாறிவிட்டது.
மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம்
என விலை வைத்த ராஜா
என் கோலத்தை பார்த்து என்
காலில் விழுந்தார்.
அந்த பணிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த
*திறுநீறுக்கும் ருத்ராட்சத்துக்கும்*
தான்,
நான் எதை வேண்டாம்
*வேண்டாம்* என்று சொன்னேனோ
அதைவிட உயர்வான பொருள் தான்
எனக்கு கிடைத்தது.

மதிப்புள்ள இந்த பெருளை நான்
வேண்டாம் என்றால்
*விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்*
அதுவே எனக்கு போதும் என்றார்.
ஆம், என் உறவுகளே
*இந்த திறுநீறும் ருத்ராச்சமும்*
நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...