Skip to main content

நெல்லி மரம்

நெல்லி மரத்துக்கும் செல்வத்துக்கும்
என்ன சம்மந்தம்....?

    உலத்திலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனால் பணம் வேண்டுமென்றால்
குபேரனைத்தான்
வழிபடுவோம்
குபேரன் மாதிரி
பணக்காரணாக
வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.ஆனால் அந்த குபேரனுக்கே
பணத்தட்டுப்பாடு
வந்தபோது என்ன.செய்தார் தெரியுமா?
    போர் ஏற்ப்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழந்து விட்டார் குபேரன்.செல்வத்துக்கு அதிபதியான
குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை
இழந்து தவித்த போது சிவபெருமானிடம்
சென்று முறையிட்டார்.
"நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.
    செல்வத்துக்கும்
நெல்லிமரத்துக்கும்
என்ன சம்பந்தம்
என்று யோசித்த
குபேரன் சிவபெருமானின்
கட்டளை என்பதால்
எதுவும் பேசாமல்
ஆயிரக்கணக்கான
நெல்லி மரங்களை
வளர்த்தார்.
    நெல்லி மரங்கள்
பராமரிப்பிலும் குறை வைக்கவில்லை.
ஏனெனில் சிவபெருமானின்
ஆணை ஆயிற்றே
நாள்கள் கடந்து விட்டன.நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன.காய் காய்த்து காய்களெல்லாம்
இனித்தன.
    குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிற்று.சூழ்ச்சி
செய்து செல்வம்
பறித்த வளங்கள் எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம்
கொடுத்தார்கள்
இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன
குபேரனைவிட
பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத்
தொடங்கினார்கள்
    குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம்.
மீண்டும் சிவபெருமானிடம்
சென்றார்.
    "நெல்லி மரங்கள் வளர்ந்ததா?இழந்த செல்வம் கிடைத்ததா"? என்றார் சிவபெருமான்.
    "நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த
காரியத்தைப் புரிந்துக் கொள்ள
முடியவில்லையே"
என்றார் குபேரர்.
    "நீ வைத்தவை நெல்லி மரங்கள்
அல்ல லட்சுமிதேவி
உரிய முறையில்
அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த
பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின்
அருளைப் பெற்றாய்" என்று
சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை சொல்லலானார்
    மேலும்"ஒருநாள் தேவலோகத்தில்
இந்திரன் அமுதத்தை உண்ணும்போது
அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம்.அதிலிருந்து முளைத்து உண்டானதுதான்.
நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள்"
என்றார்.
    மகாலட்சுமியின்
சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து தினசரி
நீர் ஊற்றி லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...!

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...