Skip to main content

புலிப்பாணி சித்தர் வரலாறு

இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல.

இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:

ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார்.

புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர்.

நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார்.

ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது. போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார்.

அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.

இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது. அதனால் இவரை குருவை மிஞ்சிய சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பழனி முருகன் சிலையை போகர் செய்யும்போது ஒன்பது வகை விஷ மூலிகைகளை வைத்து தம் குருநாதர் சிலை செய்கிறாரே இவை மனிதனை குணப்படுத்துவதற்க்கு பதில் ஆளையல்லவா கொன்றுவிடும் என்ற சந்தேகமும் புலிப்பாணிக்கு இருந்து வந்தது.
இதை தன் குருநாதர் போகரிடம் கேட்டார்.

மக்கள் மீது புலிப்பாணிக்கு இருக்கும் அபிமானத்தை பாராட்டிய போகர் கவலை கொள்ளாதே நீ கொண்டு வரும் ஒன்பது மூலிகைகளையும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்தால் நவபாஷாணம் என்னும் மருந்து கிடைக்கும் இந்த மருந்தை நேரடியாக சாப்பிட்டால் மரணம் சம்பவிக்கும் என்பது உண்மையே. ஆனால் நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்க்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருத்துவத்தன்மை பெறும்.

மேலும் நவபாஷாணத்தின் வாசம் பட்டாலே மனிதர்கள் புத்துணர்வு பெறுவர் நான் செய்யும் இந்த முருகன் சிலை கலியுகம் முடியும் வரையில் அங்கேயே இருக்கும் அவன் அருளால் உலகம் செழிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார் போகர்.

மூலிகை வைத்தியத்தில் கை தேர்ந்தவரான புலிப்பாணி பலருக்கு மூலிகை வைத்தியம் செய்து பலரை நோயில் இருந்து காத்துள்ளதாக கூறப்படுகிறது.

போகர் இறந்த பிறகு அவரின் சமாதிக்கு பூஜை செய்வதை  வழக்கமாக வைத்திருந்தார். புலிப்பாணியை மனதார நினைத்தால் அவரே நேரடியாக வந்து மருந்து தருவதாக சொல்லப்படுகிறது.

இவரும் தன் குருநாதர் வாழ்ந்த பழனியிலேயே சமாதியாகிவிட்டதாக கூறப்படுகிறது..

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:

புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9

தியானச் செய்யுள்:

மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...