Skip to main content

எலுமிச்சை

கோவிலில் எலுமிச்சை பழம் வாங்கிட்டு வந்து இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள்.*



பொதுவாகவே எலுமிச்சை பழத்திற்கு ‘தேவ கனி’ என்ற பெயர் உண்டு. தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்றும் கூறலாம். எலுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எலுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது. இந்த எலுமிச்சை பழத்தை நல்லவர்கள் நல்ல சக்தியை பெறவும், தீயவர்கள் தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எலுமிச்சை பழத்தை கோவிலில் கொடுக்கப்படும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வழுபெற்று இருக்கும். எலுமிச்சம் பழத்தை 18, 21, 51, 54, 108, 1008 என்ற எண்ணிக்கைகளில் மாலையாக கோர்க்கபட்டு அம்மனுக்கு சார்த்தப்படுகிறது. அதில் இருந்து ஒவ்வொன்றாக பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபடுகிறது. தெய்வ தன்மையுள்ள இந்த எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பலருக்கும் தெரிவதில்லை. அதை பற்றி இப்பதிவில் காணலாம்.



முக்கனிகளுக்கு கிடைக்காத சிறப்பு எலுமிச்சைக்கு கிடைக்க காரணமாக இருப்பது அதில் எந்த குற்றமும் இல்லாததே ஆகும். சில பழங்களுக்கு புள்ளி குற்றம், வண்டு குற்றம் என்று பல குற்றங்கள் கூறுவதுண்டு. ஆனால் தேவ கனியாகிய எலுமிச்சைக்கு இது போல் எந்த குற்றங்களும் பொருந்துவதில்லை. துர்கை அம்மனுக்கு எலுமிச்சம் மாலை சாற்றி வழிபட்டு பிரசாதமாக கொடுக்கபடும் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் குடும்பத்தில் இருக்கும் பீடை ஒழியும். கஷ்டங்கள் நீங்கும்.

இது போல கோவிலில் பிரசாதமாக நீங்கள் வாங்கும் எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். காய்ந்து போனதும் குப்பை தொட்டியில் போட்டு விடாதீர்கள். பூஜைக்கு பயன்படுத்தபடும் பூக்கள், பழங்கள் காய்ந்து போனால் கண்டிப்பாக குப்பையில் போடக் கூடாது. அது தெய்வத்தை அவமதிக்கும் செயல் போன்றது. இவ்வாறு செய்வதால் தரித்திரம் வரும். கஷ்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் போட வேண்டும். இல்லையென்றால் மரம், செடி, கொடிகளில் போடலாம்.



பல பேர் கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வாகனங்களில் வைப்பார்கள். இது சரியான முறை. வாகனங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. எந்த பிரச்சனையும் இன்றி வாகனம் செயல்படும். காய்ந்த பின் அப்படியே வைத்திருக்க கூடாது. எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

அது போல் பீரோவில் வைக்கலாம். ஆனால் பீரோவில் வைப்பதால் வெப்பம் காரணமாக எலுமிச்சை அழுகும் நிலை வரலாம். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் வைப்பது நல்லது. கல்லாப்பெட்டியில் போட்டு வைக்கலாம். வியாபாரம் விருத்தி பெறும்.



கோவிலில் எலுமிச்சை பழம் வாங்கிட்டு வந்து கண்டிப்பாக திருஷ்டி சுற்றி போடக் கூடாது. வீட்டில் இருக்கும் எலுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் பிரசாதமாக கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வைத்து திருஷ்டி சுற்றவே கூடாது. இதுவரை அப்படி செய்திருந்தால் பரவாயில்லை. இனி தெரிந்தும் செய்யாதீர்கள். தெய்வ சக்தி பெற்ற எலுமிச்சையை திருஷ்டிக்காக பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல.

கோவிலில் இருந்து ஒரு பழம் வாங்கி வந்தால் சரி, ஒன்றுக்கும் அதிகமாக வாங்கி வந்தால் அதனை தாராளமாக சாறு எடுத்து சர்க்கரை, தேன் கலந்து குடிக்கலாம். ஆரோக்கியம் நலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். இதில் எந்த தவறும் இல்லை. மாறாக வீணாக்குவது, குப்பையில் போடுவது, அழுக விடுவது, திருஷ்டி சுற்றுவது இது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது.



எலுமிச்சைக்கு இருக்கும் சக்தி அளப்பரியது. மூன்று எலுமிச்சம் கனிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சுப காரியதிற்கு செல்லும் போதோ, வெற்றியை நோக்கி செல்லும் போதோ இந்த கனிகளை அம்மன் கோவில் வாசல் முன்னர் இருக்கும் திரிசூலத்தில் மூன்றையும் சொருகி விட்டு போகிற காரியம் வெற்றி பெற வணங்கி செல்லுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். அம்மனுக்கு எலுமிச்சம் மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எலுமிச்சைபழ மாலை அம்மனுக்கு வேண்டிக் கொண்டு சாற்றலாம்.



உக்ர காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது சிறப்பான வழிபாடு. எதிர்மறை பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். அதே போல் துர்கைக்கு ராகு காலத்தில்                எலுமிச்சை பழ மாலை சாற்றுவதும், எலுமிச்சைபழ தீபம் ஏற்றுவதும் பெரும் பேறுகளை பெற்று தரும். வீட்டில் எலுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது. கோவில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்*

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...