Skip to main content

சித்திர குப்தன்

சித்திர குப்தன் இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார். ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும். சித்திர குப்தன் நம்மை “இந்த  ஆத்மா புண்ணிய ஆத்மா” என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை  இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.சித்ரா பௌர்ணமி அன்று வழிபாடுகள் என்ன   சித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு புராணக் கதை ஆகியன இன்று பதிவு செய்துள்ளோம். மதுரையில் இருந்து தேனி 77 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி கடந்தால் தேனிடைய அடைந்துவிடலாம். தேனியில் இருந்து போடிநாயக்கனூர் சாலையில் அமைந்துள்ள கோடங்கிப்பட்டியை சுமார் 9 கிலோ பயணித்தாலே அடைந்துவிடலாம்.

சித்திரபுத்திரநாயனாருக்கான திருக்கோவில் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் சித்திரபுத்திரர் கோவிலைவிட இக்கோவில் பிரசிதிபெற்றிருக்கக் காரணம் இத்தலத்தின் அருகிலேயே ஆறுமுக நயினார் கோவில், கம்பராயப் பெருமாள் காசிவிஷ்வநாதர் ஆலயம், திருமலைராயப் பெருமாள் கோவில், சாமாண்டியம்மன் கோவில் என ஏராளமான மற்றும் ஒன்றுக் கொண்டு தொடர்புடைய திருத்தலங்கள் உள்ளது.

சித்ரா பெளர்ணமி நாளில் சித்திரையில் தோன்றிய புத்திரன்

சித்திரகுப்தன் மீண்டும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், பௌர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், சக்திதேவி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அக்கப்படுகிறார். இருப்பினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக புகழ்பெற்றுள்ளது.



சித்ரா பெளர்ணமி அன்று காலை பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியுமான நோட்டு, பேனாவை வைத்து ஒரு தாளில் "சித்திர குப்தன் படியளப்பு "என்று எழுதி, சித்திர் குப்தனை நினைத்து வணங்க வேண்டும்.



சர்க்கரை பொங்கல், ஏலம் ,கிராம்பு, பச்சை கற்பூரம் சேர்ந்த தாம்பூலம், பானகம் போன்றவற்றை நைவேத்தியம் செய்யலாம். பசுவின் பால்,  மோர் சாப்பிடக் கூடாது. அன்ன தானம், விசிறி, குடை, செருப்பு போன்ற தான தருமங்களை செய்தால் நம் கணக்கில் புண்ணியங்களை  அதிகப்படுத்தும்.



இந்நாளில் கிரிவலம வருதல் பன்மடங்கு பலனைத் தரும். கடலில் நீராடுதல் மிகவும் சிறந்தது. அம்பிகையின் வழிபாடு சிறந்தது. சித்திர  குப்தனை நினைத்து இந்த சிறு வரிகளை சொல்வது நன்று.



சுவாமி! "அடியேன் செய்த பிழைகள் மலையளவாக இருந்தாலும் கடுகளவாக மாற்றிவிடு.நான் செய்த புண்ணியம் கடுகளவாக இருந்தாலும்  மலையளவாக மாற்றி விடு .உன் மனைவியுடன் பிறந்தவள் நான். ஆதலால் பாவங்களை நீக்கி, புண்ணியத்தை மட்டுமே கணக்கில் எடுத்து  கொள் "என்று மனதார வேண்ட வேண்டும்.

சித்ரா பெளர்ணமியுடன் சம்பந்தப்பட்ட ஒரு கதை இருக்கிறது. பிருஹஸ்பதி முனிவர் இந்திரனின் குருவாவார். இந்திரனோ தேவர்களுக்கெல்லாம் தலைவர். ஒருமுறை இந்திரன் பிருஹஸ்பதியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை. ஆகவே அவனுக்கு சில  படிப்பினையை சொல்லித் தருவதை பிறுஹஸ்பதி நிறுத்தினார்.

குரு இல்லாதபோது இந்திரன் பல தீய செயல்களில் ஈடுபட்டான். குரு மீண்டும் தன் கடமையை செய்ய ஆரம்பித்தவுடன், தான் என்ன செய்ய வேண்டும் என்றும், தன் தவறுகளைக் கண்டு வருந்துவதாகவும் கூறினான். முனிவர் அவனை ஒரு புண்ணிய பிரயாணம் மேற்கொள்ள  சொன்னார். மதுரைக்கு அருகில் வந்ததும் தன் தோளில் அதுவரை சுமந்து வந்த பாவ மூட்டைகள் கீழே இறங்குவதைக் கண்டான். இறங்கிய  நிலையில் அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இந்த ஆச்சரியத்தைப் பார்த்து அதே இடத்தில் அந்த சிவலிங்கத்திற்கு ஒரு  கோவில் எழுப்பத் தீர்மானித்தான்.



அந்த கோவில் உடனடியாக எழுப்பப்பட்டது. அந்த சிவலிங்கத்தை பூஜிக்க நினைத்தபொழுது சிவபெருமான் அருகில் இருந்த குளத்தில் தாமரை  மலர்களைப் பூக்க செய்து இந்திரனுக்கு அருள் புரிந்தார். இப்படி அவர் பூஜித்த நாள் தான் சித்ரா பெளர்ணமி ஆகும். எனவே இந்நாளில்  சிவலிங்கத்திற்கு வில்வ இலை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும்.



சித்திர குப்தனை நினைத்து சித்திரா பெளர்ணமி நாளில் வழிபடுவதன் பலன்கள்...!

ஒவ்வொரு மாதங்களில் வரும் பெளர்ணமி விசேஷமானது. அதுவும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியைப் பற்றி மிகவும் சிறப்புமிக்க  நாளாகும்.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் "சித்ரா பெளர்ணமி "கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள்.

அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம் "நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் "என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து, தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார். இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி, மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு 'சித்திர குப்தன்' என்று பெயர் வைத்தாள்.



ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது. தன்  மனக்கவலையை சிவனிடம் சொன்னார். இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும்  என்று நீங்களும், விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?. ஆனால் யார் எவ்வளவு பாவ, புண்ணியங்கள் செய்தார்கள் என்று  தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா.



உன் கேள்விகளை, "அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய் கேள், இதற்கு தீர்வு சொல்வார் "என்று சிவபெருமான் கூறினார். பிரம்மாவிடம் சென்று தன் கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா.



பிரம்மா யமதர்மரிடம், சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன்  கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.



பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும், மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த  கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.



அன்றிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார். ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும். சித்திர குப்தன் நம்மை “இந்த  ஆத்மா புண்ணிய ஆத்மா” என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை  இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...