Skip to main content

ஸம்ஜ்ஞான சூக்தம்


*ரிக்வேதத்தின் சமத்துவம்*

ரிக்வேதத்தின் 1028 சூக்தங்களில், இறுதி சூக்தமாக அமைந்திருக்கும் ’ஸம்ஜ்ஞான சூக்தம்’ நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஊக்குவிக்க ஓதப்படும் ஒரு மந்திரமாகும்.

இம்மந்திரம் பள்ளிக்கூடங்களிலும் ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களிலும் பொதுவாக ஓதப்படுகின்றது.

இம்மந்திரத்தின் உட்பொருள் சமத்துவத்தையும் ஒற்றுமையும் ஆழமாக உணர்த்துவதோடு, பரம்பொருளிடம் உலக சமத்துவத்துக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் அமைந்துள்ளது.

ஸம்ஜ்ஞானம் என்றால் என்ன?

ஸம்ஜ்ஞானம் என்றால் ஒருமித்த உணர்வு எனப் பொருள்படும்.

இந்த சூக்தம் 4 வரிகளை உடையது.

வள்ளுவர் இரண்டே அடியில் உலக அளந்தது போல, இந்த சூக்தம் நான்கு வரிகளில் உலக சமத்துவத்தை அளந்துவிட்டது.

|| ஸம்ஜ்ஞான சூக்தம் ||

ஸம்ஸமித்யுவஸே வ்ருஷன்னக்னே விஷ்வான்யர்யா
இலஸ்பதே ஸமித்யஸே ஸநோ வஸூன்யா பரா (1)

ஸம்கச்சத்வம் ஸம் வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதாபூர்வே ஸம் ஜானானா உபாஸதே (2)

ஸமானோ மந்த்ரஸ் ஸமிதிஸ் ஸமானீ ஸமானம் மனஸ்ஸஹ சித்தம் ஏஷாம்
ஸமானம் மந்த்ரம் அபி மந்த்ரயே வஹ்ஸமானேன வோஹவிஷா ஜுஹோமி (3)

ஸமானீ வ ஆகூதிஸ்-ஸமானா ஹ்ர்தயானி வஹ்
ஸமானம் அஸ்து வொ மனோயதா வஸ்ஸுஸஹாஸதி (4)

|| பொருள்: ||

உலகின் ஒரு திசையில் சூரியன் உதித்திருந்தாலும் அது உலகத்தின் எல்லாப் பக்கத்திலும் தன் ஒளியைப் பரப்பி, எல்லா உயிர்களுக்கும் ஒரே வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கின்றது.

அக்கினி வடிவாய் விளங்கும் இறைவன், உலகெங்கும் வாழும் எல்லோரையும் ஒன்றிணைக்கட்டும்.

நாமனைவரும் ஒன்றிணைவோம்! ஒற்றுமையாக ஒருமித்த உணர்வோடு, ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வோம்! நம்முடைய மனங்களும் எண்ணங்களும் ஒன்றாகட்டும்! இந்த பரந்து விரிந்த உலகத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்வோம்!

நம் பிரார்த்தனைகள் ஒன்றே! நம் தேவைகளும் ஒன்றே! நம் எண்ணங்கள் ஒன்றே! நம் மனங்கள் ஒன்றே! நம் சித்தங்கள் ஒன்றே! நம் அறிவுத்திறன்கள் ஒன்றே! நாம் எல்லோரும் இறைவனுக்கு முன்னிலையில் ஒன்றே!

நம் நோக்கங்கள் ஒன்றே! நம் தீர்மானங்கள் ஒன்றே! நம் சிந்தனைகள் ஒன்றே! ஒருமித்த உணர்வோடு நாம் செயல்பட்டால், ஒற்றுமையோடு வாழ்ந்தால், உலகெங்கும் சமாதானமும் இன்பமும் நிறைந்திருக்கும்.

“”ஸர்வத்ர ஸமம் பஷ்யதி”” – எங்கும் எவரிடத்தும் சமத்துவத்தைக் காண்பாயாக (பகவத் கீதை 6:32)

*ஓம் நமச்சிவாய...!*

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்…

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...