Skip to main content

கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி

கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி

இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம், துன்பத்தைக் கண்டால் வாடி விடுகிறது.

மனிதனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது என்பது குறித்து, பாரததேசத்தை ஆண்ட போஜ மகாராஜன் தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,""ஒருவன் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் அவனை துன்பம் விரட்டும்.

இது தவிர, தெய்வ நிந்தனை செய்வது, ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பது, கோள் சொல்லி குடும்ப ஒற்றுமையைக் குலைப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களை எந்தப் பிறவியில் செய்திருந்தாலும், அது விரட்டி வந்து துன்பத்தைத் தரும்,'' என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், பாவம் செய்யாத மனிதர் யார் இருக்கிறார்கள்? ஏதோ, ஒரு பாவத்தை செய்து தொலைத்ததால் தான், இப்போது கஷ்டம் நம்மை வாட்டுகிறது.

இவ்வாறு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

"பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்ற முழுமையான நம்பிக்கையுடன், நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.

தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் அவர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

தினமும் நீராடிய பின், "நரசிம்ம பிரபத்தி' ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்.

அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது.

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.

கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.

48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும்.

கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:

ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:

வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:

ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:

இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:

யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:

ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:

தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே.

சமஸ்கிருதத்தில் சொல்ல முடியாதவர்கள், இந்த தமிழாக்கத்தைப் படிக்கவும்.

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

இவ்வுலகத்திலும் நரசிம்மரே!

அவ்வுலகத்திலும் நரசிம்மரே!

எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!

நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை

அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...