Skip to main content

பிரபஞ்சம்

*பிரபஞ்சத்திடம் பேசுவது எப்படி..?*

நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்திடம் பேசுவதன் மூலமாக பிரபஞ்ச சக்தியினை நம்முள் கிரகித்துக்கொள்ள முடியும்.

பிரபஞ்சத்திற்க்கு நாம் நினைக்கும் செயல்களை அதாவது சிந்தனை மூலமாக மிகச்சரியான முறையில் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.

ஏனென்றால் பிரபஞ்சத்திற்க்கும் நமக்கும் உள்ள தொடர்பில் நாம் எதை கேட்கின்றோமோ அதனை ஈர்க்கும் மிகப்பெரிய சக்தியை நாம் நம் ஆழ் மனதின் மூலமாக அடைய மனதை ஒரு நிலைப்படுத்தி நமக்கு தேவையானதை மனதில் மெதுவாக கூற வேண்டும்.

திரும்ப திரும்ப நாம் அடைய நினைத்ததை அந்த எண்ணங்களை செயல்வடிவில் நமது ஆழ் மனமூலமாக அகக்கண்ணில் கண்டு உணர வேண்டும்.

இப்படி நம்மால் உணரப்படும் செயலானது பிரபஞ்ச சக்திக்கு ஆட்கொள்ளப்பட நாம் நம் மனதை நேர்மறையான எண்ணங்களினால் நிரப்ப வேண்டும்.

நாம் நமது எதிர்மறையான எண்ணக்கருத்துக்களை ஒரு போதும் நினைக்க கூடாது.

செயல்வடிவமாக சிந்திக்கவும் கூடாது.

இப்படி எதிர்மறை சிந்தனைகள் தோன்றா வண்ணம் நேர்மறையான  எண்ணங்களை நம்பிக்கையோடு மனதினை ஒரு நிலைப்படுத்தி பெறவேண்டும்.

*பிரபஞ்சத்திடம் வேண்டுங்கள்..!*

தினம்தோறும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் கண்களை மூடி ப்ரபஞ்சத்தோடு பேசலாம்.

அதிகாலை ,மதியம்,மாலை,இரவு, நள்ளிரவு  என எப்போது வேண்டுமானாலும் நாம் பேசவேண்டும்.

ப்ரபஞ்சத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் நாம் ப்ரபஞ்ச சக்தியை மிக  எளிதாக கிரகித்துக்கொள்ள முடியும்.

எப்போதும் நல்ல சிந்தனைகள் நல்ல எண்ணங்களால் நாம் நம்மை உயர்வாக உயர்த்தி கொள்ளுதல் மிக  அவசியம்.

நான் சந்தோஷமா இருக்கிறேன்.
நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்னை சுற்றி நல்ல நேர்மறை எண்ணம் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.
நான் தனித்தூவமான பிறவி
அனைவரோடும் அன்பாக இருக்கிறேன்.
நான் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து வருகின்றன.
என் எண்ணங்கள் அனைத்தும் சீரியமுறையில் செயல் வடிவம் பெறுகின்றது.
நான் ஆரோக்கியமான சூழலில் அழகான வீட்டில் வசிக்கிறேன்.
எனக்கு நல்லவர்களின் நட்பும் ஆசியும் உதவியும் கிடைத்து வருகிறது.
நான் எனது தொழிலை விரிவுபடுத்தி வெற்றி காண்கிறேன்.
நல்ல குடும்பம்  என்னுடையது.
நான் நினைத்தவற்றை அடைந்து வருகிறேன்.
என் தேவைக்கு போதுமான செல்வம் எனக்கு கிடைத்து வருகிறது.
நான் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெறுகிறேன்...

இப்படி பலவாறும் நேர்மறை எண்ணங்களை கொண்டு ஆழ்மனதில் நாம் தியானிக்கும் போது அவற்றை எல்லாம் நம் அக்காட்சிகள் மூலமாக காணும்போது நிச்சயமாக நம் வாழ்க்கை மிகப்பெரும் வெற்றி பெறுவது உறுதி.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...