ஆத்மாவே உண்மையான நீ...!*
கடோபநிஷதம்,...!
‘நாம் உண்மையில் யார்?’ என்ற விளக்கத்தை தேர் உவமானம் மூலம் விளக்குகிறது.
இந்த விளக்கம் நம் உடல், மனம், ஆத்மா ஆகியவற்றில் எது மேலானது என்ற வரிசையையும் கொடுக்கிறது.
பொதுவாக, மக்கள் உடலைவிட முக்கியமான மனதைத்தான் ‘நான்’ என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்துச் செயல்படுகிறார்கள்.
இந்தக் கருத்து தவறு என்பதை எடுத்துச் சொல்லி, ‘ஆத்மனே உண்மையான நீ’ என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தப் பாடம் அமைந்துள்ளது.
தேர் உவமையும் அதன் மூலம் விளக்கப்படும் உண்மைகளும்,
க) தேர் நம் உடல்: கண்ணுக்குப் புலப்படும் தேரின் அனைத்து பாகங்களும் நமது உடலுக்கு உதாரணம். உயிரற்ற உடலை யாரும் ‘அவர்’ ‘இவர்’ என்று குறிப்பிடுவதில்லை. ‘அதை’ வீட்டிலிருந்து கூடிய சீக்கிரம் அப்புறப்படுத்துவதுதான் எல்லோரின் நோக்கமாக இருக்கும்.
ஆகவே, நாம் நம் உடல் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் எல்லோருக்கும் விளங்கக் கூடிய ஒரு உண்மை. ‘நாம் உடல் இல்லை’ என்பது மட்டும்தான் இங்கு கருத்தே தவிர ‘உடல் முக்கியமானது’ என்பதில் எந்தவிதக் கருத்துவேறுபாடும் இருக்கக் கூடாது.
நாம் இந்த உலகில் இயங்க, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட உடல் மிக அவசியம். தேரைப் பழுதில்லாமல் தூய்மையுடன் வைத்திருப்பதுபோல இந்த உலகுடன் உறவாட நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே கருவி என்ற கவனத்துடன் நமது உடலைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும்.
௨) குதிரைகள் நம் புலன்கள்: நமது கண், வாய், செவி போன்ற ஐந்து புலன்களும் கை, கால் போன்ற ஐந்து கரணங்களும் குதிரைகளுக்கு ஒப்பாகும்.
இந்தப் பத்து கருவிகளும் உடலில் இருந்து வேறுபட்டவை என்பது பலருக்கு தெரியாது. குதிரைக்கு எப்படி தேரின் பாதுகாப்பில் எந்தவித அக்கறையும் கிடையாதோ, அதுபோல நமது புலன்களுக்குத் தங்கள் தாற்காலிக இருப்பிடமான உடல்மீது எந்தப் பிடிப்பும் கிடையாது.
இறந்தபின் நமது புலன்கள் இந்த செயலற்றுப்போவதால் தங்கள் விருப்பத்துக்கு செயல்பட்டு உடலின் ஆரோக்கியத்துக்கு கேடுவிளைவிப்பதை பற்றி அவை கவலைப்படுவதில்லை.
நம்மிடம் பணம் அதிகம் இருக்கிறது என்பதால் டீசல் காருக்கு பெட்ரோல் போடுவதில்லை. ஆனால், உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளைப் ‘பணம் இருக்கிறது’ அல்லது ‘இலவசமாகக் கிடைக்கிறது’ என்ற காரணத்தால் உண்பதை நாம் தவிர்ப்பதில்லை. உடல் வேறு, புலன்கள் வேறு என்ற அறிவு இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
கண் போகும் திசையில் எல்லாம் குதிரைகளைப் பயணிக்க அனுமதித்தால், தேர் நாம் விரும்பும் இடத்துக்கு போகாது. எனவேதான், குதிரையின் கண்களுக்கு கவசமிடுவது அவசியமாகிறது. அதுபோல நம் கண், மூக்கு, நாக்கு போன்ற ஐந்து புலன்களையும் அடக்கி நமது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
௩) கடிவாளம் நமது மனம்: குதிரையைக் கட்டுக்குள் வைக்க நமக்கு உதவுவது கடிவாளம். அதுபோல, நம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கரணங்களை நம் விருப்பப்படி செலுத்த உதவுவது நமது மனம்.
மனம் செம்மையாக இல்லையானால் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என, உலகில் உள்ள பொருட்களும், மனிதர்களும், சூழ்நிலைகளும் நமது மனதின் நிலைமையை முடிவுசெய்யும் அவலநிலைக்கு நாம் ஆளாவோம். நமது செயல்பாடுகள் நமது அறிவைப் பொறுத்தும், நமது புலன்களின் மேல் நமக்குள்ள ஆதிக்கத்தைப் பொறுத்தும் அமையும்.
கடிவாளம் சரியாக அமையாத குதிரைகள் தங்கள் விருப்பப்படி செயல்படுவதுபோல, உறுதி இல்லாத மனதுடன் இருப்பவர்கள், ‘எது நல்லது?’ என்று தெரிந்து இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் சக்தி இல்லாதவர்களாக இருப்பார்கள்.
௪) தேரோட்டி நம் புத்தி: கடிவாளத்தைக் கையில் ஏந்தி குதிரைகளைக் கட்டுப்படுத்தும் தேரோட்டிதான் நமது புத்தி. மனதின் மூலம் புலன்களைக் கட்டுப்படுத்தி, கரணங்களைச் சரியான பாதையில் செலுத்துவது புத்தியின் வேலை.
அடையவேண்டிய இலக்கைப் பற்றிய தெளிவும், செல்ல வேண்டிய சரியான பாதையின் அறிவும் தேரோட்டிக்கு அவசியம். பெரும்பாலான மக்களுக்கு ‘குறையில்லாத இன்பத்தை அடைய வேண்டும்’ என்றத் தெளிவு இருந்தாலும் பொருள் ஈட்டுவதன் மூலம் அந்தக் குறிக்கோளை அடைந்துவிடலாம் என்ற அறியாமை இருந்து வருகிறது.
எனவே, புத்தி என்னும் தேரோட்டி, தனக்கு வழி தெரியும் என்ற தவறான நினைப்பில், இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அவர்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறான்.
௫) தேரின் பயணி (நாயகன்) ஆத்மன்: தேரோட்டியின் பின்புறம் அமர்ந்து, வண்டியில் பயணம் செய்பவர் பார்வைக்குத் தேரின் நாயகன் போலத் தெரிந்தாலும், உண்மையில் அவர் நாயகனின் பிரதிநிதி. ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டில் செயல்படும் வெளிநாட்டு தூதர் போல, பரமனின் பிரதிபிம்பம்தான் நம் உடலையும் மனதையும் செயல்படுத்துவது.
அனைத்து உயிரினங்களும் செயல்படக் காரணமாக இருப்பது ஒரே பரமன்தான். ஆனால், எண்ணற்ற உயிரினங்களின் வெவ்வேறு உடல்கள் மட்டும் நம் கண்களுக்கு தென்படுவதால் அவை அனைத்தையும் இயக்குவது அவற்றின் மனதில் பிரதிபலிக்கும் பரமனின் பிரதிபிம்பம் என்பதை நாம் உணர்வதில்லை.
பரமன் - ஆத்மா. பிரதிபிம்பம் - அகம்பாவம். ‘நான்’ என்ற எண்ணம் அகங்காரம். பரமனை ஆதாரமாகக் கொண்டுதான் அனைத்தும் செயல்படுகின்றன. நம் மனதில் பரமனின் பிரதிபிம்பமான அகம்பாவம் தோன்றுகிறது. வெளிநாட்டு தூதரை அவருடைய நாட்டுக்கு அதிபதியாக கருதுவதைப்போல அகம்பாவம்தான் நம் உணர்வுக்கு ஆதாரம் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.
எனவேதான், அகம்பாவத்துடன் கூடிய மனதை ‘நான்’ என்ற எண்ணத்தால் குறிப்பிடுகிறோம். இந்த அறியாமை நம்மிடம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது. ஆகவேதான், நாம் இன்பத்தை அடையவும் துன்பத்தைத் தவிர்க்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். பரமன் ஆனந்தமயமானவன். இன்பத்தைத் தேடுவது பரமனுக்கு அனாவசியம். இந்த உலகமும் அதன் மூலம் பெறும் அனுபவங்களும் பரமனின் விளையாட்டு. அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இன்பமாக இருக்காமல், அவற்றைத் தரம் பிரித்து சிலவற்றை விரும்பியும் சிலவற்றை வெறுத்தும் நாம் நம் வாழ்க்கையைத் தேவை இல்லாமல் சிக்கலாக்கிக் கொள்கிறோம்.
தேர் போகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பு. பொழுது போகாமல் தேரில் சிறிது நேரம் உலா சென்று வரலாம் என்று செல்பவருக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் இன்பத்தை மட்டும் கொடுக்கும். தேர் எந்தத் திசையில் சென்றாலும் எவ்வளவு வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சென்றாலும், உலா செல்பவருக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை. அதேபோல் நம் உடலைச் செலுத்துவது பரமனின் பிரதிபிம்பம் என்பதை அறிந்தவர்களுக்கு வாழ்வே ஒரு சுற்றுலா.
தேரின் நாயகனான பரமன் ஆனந்தமயமானவன் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டால் இன்பத்தைத் தேடி அலையவேண்டிய அவசியமில்லை. வாழ்வில் சென்றடைய வேண்டிய குறிக்கோள் என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்து அனுபவங்களையும் இன்பமாக ஏற்றுக்கொண்டு, இந்த உடலின் ஆயுள் தீரும்போது உலா முடியப்போகிறது என்ற உணர்வுடன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
*ஆத்மாவே உண்மையான நீ...!*
நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்…

Comments
Post a Comment