Skip to main content

மனதின் இயல்பு

*மனதின் இயல்பு என்ன?*

மனம் போடும் வேடங்களில்தான் மனிதன் ஏமாந்து போகிறான்.

ஒரு நல்ல புத்தகம் படித்த பிறகோ நல்ல விஷயங்களைக் கேட்ட பிறகோ இனி நானும் புத்தன், காந்தி என்று மனம் சொல்லும்.

அதைக் கேட்டு நாமும் இருமாந்திருப்போம். ஆனால் நான்கு நாட்கள் கடந்த பிறகு மனம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.

மனிதனின் இந்த நிலையை உட்கருத்தாக வைத்து அழகாகப் பாடியிருக்கிறார் காரைக்கால் அம்மையார்..

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!...
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!

என்று பாடுகிறார்.

சிவன் தலையில் பிறை நிலவை சூடியிருக்கிறார். மார்பில் வெண் பன்றிக் கொம்பை அணிந்திருக்கிறார்.

பிறை நிலவின் ஒளியால் வெண் பன்றிக் கொம்பும் ஒளிர்கிறது. இதை மார்பில் உள்ள பாம்பு பார்க்கிறது.

மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் அந்த பாம்பானது உயர்ந்ததும் சுயமாக ஒளி வீசக்கூடியதுமாகிய நிலவை அறிந்து கொள்ளவே செய்யாது என்கிறார்.

பாம்பு என்பது ஆசையாகிய காமத்தை உடைய மனதைக் குறிக்கிறது. வெண் பன்றிக் கொம்பு மனதிற்குக் கீழே உள்ள ஐம்புலன்களைக் குறிக்கிறது. பிறை நிலவு என்பது சுயப் பிரகாசமாகிய ஆத்மாவைக் குறிக்கிறது.

புலன்களினால் கிடைக்கக் கூடிய இன்பங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியே. ஆத்மாவே ஐம்புலன்கள் வாயிலாக பிரகாசித்துக் கொண்டுள்ளது.

உயிர் போய் விட்டால் சுவை தெரியுமா இல்லை வாசம்தான் தெரியுமா?.

மனம் ஐம்புலன்கள் வாயிலாக அனுபவிப்பது அனைத்தும் ஆத்மாவின் பிரகாசமே.

மனதிற்கு மிக உயர்ந்த ஞானமாகிய கருத்துக்கள் சில நேரம் தேவையாக இருக்கிறது. மற்ற சில நேரமோ கீழான ஐம்புலன்களில் இருந்து கிடைக்கும் இன்பமே மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறது.

ஆனால் சுயமான பிரகாசத்தை உடைய ஆத்மாவின் ஞானமே உயர்ந்தது என்று முடிவு செய்து அதை நோக்கிச் செல்ல என்றுமே மனம் முடிவெடுப்பதில்லை.

மனதின் இந்த இயல்பைப் புரிந்து கொள்வது தான் மனிதனின் வெற்றிப் பாதையின் முதல் படிக்கட்டாக அமைகிறது.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

கெட் அவுட் ஸ்டாலின்

 இரண்டாம் உலகபோர் முடிவில் ஜெர்மனியினை பிரித்து ஒருபக்கம் ஜெர்மனியை கிழக்கு ஜெர்மனி என ரஷ்யா ஆக்கிரமித்து இடையில் சுவர் எல்லாம் கட்டி ஜெர்மனியை நாத்திக பூமி ஆக்கினார்கள். எங்கும் நாத்திகம், திணிக்கபட்ட கம்யூனிசம், என எல்லாம் திணித்து ஜெர்மனி வரலாற்றையே அந்நாளைய சோவியத் அதிபர் ஸ்டாலினிடம் இருந்து தொடங்குவதாக திணித்தார்கள் நாத்திகம், ஜெர்மானிய மொழி புதைப்பு , ஸ்டாலின் கொள்கை திணிப்பு என அக்கிரமம் அதிகரித்தது. ஜெர்மனிக்கு ஸ்டாலினை விட்டால் யாருமில்லை, ஆரிய கொள்கைபடி இருந்த ஜெர்மனை மீட்டவர் ஸ்டாலின் , ஆரிய பாசிசத்தை முடித்து வைத்தவர் ஸ்டாலின், என்றெல்லாம் பொய்கள் திணிக்கபட்டன‌. இன்னொரு பக்கம் மேற்கு ஜெர்மனி அமெரிக்க கட்டுபாட்டில், கடவுள் நம்பிக்கை, தொழில் முயற்சி, ஊழலற்ற நிர்வாகம் என மேலேழுந்தது. மேற்கு ஜெர்மனி பாஜக போல் பெரிய சக்தியாக வளர, கிழக்கு ஜெர்மனி உருப்படாத ஸ்டாலின் கொள்கையால் நாசமாகி கொண்டிருந்தது. பின்னாளைய ரஷ்ய ஆட்சியாளர்களும் ஸ்டாலின் திணிப்பிலே தீவிரமாக‌ இருந்தார்கள். பொறுத்து, பொருத்து பார்த்த மேற்கு ஜெர்மானிய மக்கள், ஒரு கட்டத்தில் "கெட் அவுட் ஸ்டாலின்" என...